அரசியலை நேர்மையான முறையில் நடத்த வேண்டும் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் பேட்டி


அரசியலை நேர்மையான முறையில் நடத்த வேண்டும் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் பேட்டி
x
தினத்தந்தி 11 Jun 2018 4:15 AM IST (Updated: 11 Jun 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

அரசியலை நேர்மையான முறையில் நடத்த வேண்டும் என மதுரையில் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் பேட்டி அளித்தார்.

மதுரை,

சசிகலா சகோதரர் திவாகரன் மன்னார்குடியில் அண்ணா திராவிடர் கழகம் என்ற பெயரில் நேற்று புதிய கட்சி தொடங்கினார். மேலும் அவர் கட்சியின் கொடியையும் அறிவித்தார். அவரது மகன் ஜெய் ஆனந்த், மதுரையில் முத்துராமலிங்க தேவர் சிலை மற்றும் அண்ணா சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதைத்தொடர்ந்து அவர் ஜவகர்புரத்தில் அண்ணா திராவிடர் கழக கொடியை ஏற்றினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அரசியலை இன்று சிலர் வியாரமாக்கி உள்ளனர். அதில் இருந்து அரசியலை மீட்டு எடுக்க வேண்டும். அரசியலை நேர்மையான முறையில் நடத்த வேண்டும். தேர்தல் நேரத்தில் பணம் வினியோகம் செய்வதை தடுக்க வேண்டும். ஆர்.கே.நகர் தேர்தலில் 24 மணி நேரத்தில் 20 ரூபாய் டோக்கன் கொடுக்கப்பட்டது. இதனால் மக்கள் அந்த கட்சி நிர்வாகிகளை செல்போனில் அழைத்து டோக்கன் பற்றி கேட்கின்றனர். ஒட்டுக்கு பணம் கொடுத்து மக்களை பாதாளத்திற்கு தள்ளக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story