கோடை விடுமுறை முடிந்து 15-ந்தேதி பள்ளிகள் திறப்பு பள்ளிக்கூட பொருட்கள் வாங்க மாணவர்கள் ஆர்வம்
கோடை விடுமுறை முடிந்து வருகிற 15-ந்தேதி பள்ளிகள் திறக்க உள்ளன. இதனால் மாணவ, மாணவிகள் பள்ளிக்கூட பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மும்பை,
கோடை விடுமுறை முடிந்து வருகிற 15-ந்தேதி பள்ளிகள் திறக்க உள்ளன. இதனால் மாணவ, மாணவிகள் பள்ளிக்கூட பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கோடை விடுமுறை
மும்பையில் கோடை விடுமுறை முடிந்து வரும் 15-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்தநிலையில் கோடை விடுமுறைக்காக தங்களது சொந்த ஊர் மற்றும் வெளியூர்களுக்கு சென்று இருந்தவர்கள் மும்பை திரும்பி வந்த வண்ணம் உள்ளனர்.
பள்ளிகள் திறக்க இ்ன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மாணவ, மாணவிகள் தங்களுக்கு தேவையான புத்தகப்பைகள், எழுதுபொருட்கள் உள்ளிட்ட பள்ளிக்கூட பொருட்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதன் காரணமாக பிரதான மார்க்கெட்டுகளில் உள்ள கடைகளில் இந்த பொருட்களின் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
பள்ளிக்கூட பொருட்கள்
விடுமுறை தினமான நேற்று, பள்ளி செல்லும் தங்கள் குழந்தைகளுக்கான பொருட்களை வாங்க பெற்றோர் கடைகளில் அதிகளவில் திரண்டனர். அவர்கள் குழந்தைகளுக்கு தேவையான புத்தகப்பை, எழுது பொருட்கள், தண்ணீர் பாட்டீல், ஷூ, பள்ளிச்சீருடை
Related Tags :
Next Story