குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
தென்காசி
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் மிகவும் அருமையாக உள்ளது. நேற்று முழுவதும் சாரல் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. இடையிடையே இதமான வெயிலும் அடித்தது. குளிர்ந்த காற்று வேகமாக வீசியது.
மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஆனாலும் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருந்தது.
நேற்று காலையில் இருந்து சுற்றுலா பயணிகள் அனைத்து அருவிகளிலும் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து பெய்த சாரல் மழையினால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இந்தநிலையில் மதியம் 1.30 மணிக்கு ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை போலீசார் வெளியேறுமாறு கூறினர். பின்னர் ஐந்தருவியில் குளிக்க தடை விதித்தனர். ஆனால், மற்ற அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்துச் சென்றனர். பின்னர் மாலை 3 மணிக்கு மேல் ஐந்தருவியில் வெள்ளம் குறைந்ததை தொடர்ந்து அங்கு குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story