மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப்பணி
விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப்பணி நடைபெற்று வருகிறது.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப்பணிகள் கடந்த மே மாதம் 15-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற 20-ந் தேதி வரை நடைபெற உள்ள இந்த பணியின்போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று கள ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த ஆய்வின்போது வீட்டில் உள்ளவர்கள் தங்கள் வீட்டில் 18 வயது நிரம்பியவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். அதனுடன் வயதுக்கான ஆதார சான்றும், இருப்பிடத்திற்கு ஆதார சான்றுக்கான நகலையும், புகைப்படத்தையும் வழங்க வேண்டும்.
மேலும் கள ஆய்வின்போது வாக்காளர்கள் தங்கள் குடும்பத்தில் உயிரிழந்தவர்கள், குடிபெயர்ந்து சென்றவர்களை நீக்குவதற்கு படிவம் 7-ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், புகைப்படம் திருத்தம் மேற்கொள்ள படிவம் 8ஏ-வை பூர்த்தி செய்து வழங்கலாம். இதற்காக வாக்காளர்கள் இணையவழியிலும் (nvsp.in) விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இந்த தகவலை கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story