மாவட்ட செய்திகள்

எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடத்துக்கு வயது 110 சிறப்பு கண்காட்சி நடைபெற்றது + "||" + Egmore Railway Station Building Age 110 A special exhibition was held

எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடத்துக்கு வயது 110 சிறப்பு கண்காட்சி நடைபெற்றது

எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடத்துக்கு வயது 110
சிறப்பு கண்காட்சி நடைபெற்றது
சென்னை நகரில் சிறந்த கட்டிட கலைகளில் ஒன்றாக எழும்பூர் ரெயில் நிலையம் திகழ்கிறது.
சென்னை,

1908-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் இந்த கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் இருந்து முதல் ரெயிலாக ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு ‘போட் மெயில்’ என்ற பெயரில் ரெயில் இயக்கப்பட்டது.
3 நடைமேடைகளாக உருவாக்கப்பட்ட எழும்பூர் ரெயில் நிலையம் தற்போது 11 நடைமேடைகளாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பழமை மாறாமல் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த கட்டிடம் 110 வயதை தொட்டுள்ளது. இதையொட்டி எழும்பூர் ரெயில் நிலைய வளாகத்தில் சிறப்பு கண்காட்சி நேற்று நடைபெற்றது. எழும்பூர் ரெயில் நிலையம் கடந்து வந்த பாதை, இயக்கப்பட்ட பல்வேறு மாடல் ரெயில் என்ஜின் உள்பட எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடத்தை பறைசாற்றும் வகையில் ஏராளமான படங்கள் கண்காட்சியில் இடம்பெற்றன.


பயணிகள் ஆர்வத்துடன் கண்காட்சியை பார்வையிட்டனர். கட்டிடத்தின் 110-வது வயதை கொண்டாடும் வகையில் தெற்கு ரெயில்வே சார்பில் ‘கேக்’ வெட்டும் நிகழ்ச்சி எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் எழும்பூர் ரெயில் நிலையத்தின் மூத்த ஊழியரான பி.எம்.கோவிந்தராசு ‘கேக்கை’ வெட்டினார். இந்த நிகழ்ச்சியில் எழும்பூர் ரெயில் நிலைய இயக்குனர் ஜெயவெங்கடேசன் உள்பட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.