மாவட்ட செய்திகள்

நித்தியானந்தா பீடத்திற்கு தியான வகுப்புக்கு சென்ற மனைவியை மீட்டுத்தர வேண்டும் விவசாயி மனு + "||" + The petitioner has to restore the wife who went to the medial class for the Nithyananda Pillai

நித்தியானந்தா பீடத்திற்கு தியான வகுப்புக்கு சென்ற மனைவியை மீட்டுத்தர வேண்டும் விவசாயி மனு

நித்தியானந்தா பீடத்திற்கு தியான வகுப்புக்கு சென்ற மனைவியை மீட்டுத்தர வேண்டும் விவசாயி மனு
பெங்களூரு நித்தியானந்தா பீடத்திற்கு தியான வகுப்புக்கு சென்ற மனைவியை மீட்டு தரக்கோரி நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் விவசாயி ஒருவர் மனு கொடுத்தார்.
நாமக்கல்,

ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் முனியப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவர் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-


நான் விவசாயம் செய்து வருகிறேன். கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி தங்களிடம் எனது மனைவி அத்தாயி மற்றும் மகன் பழனிசாமி ஆகியோர் பெங்களூருவில் உள்ள நித்யானந்தா பீடத்திற்கு தியான வகுப்புக்கு சென்று விட்டு, வீடு திரும்பவில்லை என தெரிவித்து இருந்தேன். இதையடுத்து காவல் துறையினர் எனது மகனை மீட்டு என்னிடம் ஒப்படைத்தனர்.

ஆனால் என் மனைவி அத்தாயி பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. அவர் உயிரோடு இருக்கிறாரா என்பதும் தெரியவில்லை. செல்போனிலும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. என் மனைவி மீது வங்கி கடனாக ரூ.5 லட்சமும், தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.5 லட்சமும், நகை அடமான கடனாக ரூ.30 ஆயிரமும் மற்றும் வெளிநபர் கடனும் உள்ளது.

வங்கி அதிகாரிகள் என்னை நேரில் அழைத்து ஒப்பந்தம் போடவும், பணத்தை திருப்பி செலுத்துமாறும் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். இந்த பணம் முழுவதையும் 21 நாள் தியான வகுப்புக்கு சென்ற எனது மனைவி எடுத்துக்கொண்டு செலவு செய்து விட்டார். இதனால் கடந்த 8 மாத காலமாக நான் கடன் தொல்லையாலும், உணவு இன்றியும் மன உளைச்சலில் உள்ளேன். இனி தற்கொலை செய்வதை தவிர எனக்கு வேறு வழியில்லை. எனவே எனது மனைவியை மீட்டு, நேரில் வரவழைத்து கடனை செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை கடற்படை அத்துமீறிய தாக்குதலில் பலியான ராமேசுவரம் மீனவர் உடலை யாழ்ப்பாணத்தில் இருந்து மீட்க வேண்டும் மீன்வளத்துறை அதிகாரியிடம், மகள் மனு
இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய தாக்குதலால் பலியான மீனவரின் உடலை யாழ்ப்பாணத்தில் இருந்து மீட்க வேண்டும் என்று அவருடைய மகள், மீன்வளத்துறை அதிகாரியிடம் மனு அளித்தார்.
2. ஐகோர்ட்டு உத்தரவுப்படி அருப்புக்கோட்டையில் ஊருணி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத நிலை; மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை
அருப்புக்கோட்டையில் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த வன்னியர் ஊருணியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும், அதற்கான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத நிலை தொடர்கிறது.
3. படைப்புழு தாக்கிய பருத்தி செடிக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் கலெக்டரிடம் மனு
படைப்புழு தாக்கிய பருத்தி செடிகளுக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு கொடுத்தனர்.
4. கோவில் சொத்து எனக்கூறி நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து பேரணி: கலெக்டரிடம் முறையிட்டு வாக்குவாதம் செய்தவர்களால் பரபரப்பு
கோவில் சொத்து எனக்கூறி நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து பேரணி சென்று, கலெக்டரிடம் முறையிட்டு வாக்குவாதம் செய்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
5. அன்னமங்கலம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு இளைஞர்கள் கலெக்டரிடம் மனு
அன்னமங்கலம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு இளைஞர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.