தர்மபுரி, பாலக்கோட்டில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தர்மபுரி, பாலக்கோட்டில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2018 11:00 PM GMT (Updated: 11 Jun 2018 9:42 PM GMT)

தர்மபுரி, பாலக்கோட்டில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலக்கோடு,

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கட்சியின் தர்மபுரி மாவட்ட கிளை சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகர நிர்வாகி சீனிவாசன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ரமேஷ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் முனிரத்தினம், மாநில துணை செயலாளர் தவமணி, மகளிரணி செயலாளர் ஜெயலட்சுமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். தமிழக மக்களின் நலனுக்காக தொடர்போராட்டம் நடத்தியதால் கைது நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள வேல்முருகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஜனநாயக முறையில் மக்களின் உரிமைக்காக போராடுபவர்களை பழிவாங்கும் போக்கை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல், பாலக்கோடு ஒன்றிய, நகர தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் பாலக்கோடு தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பட்டாபி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மாது வரவேற்று பேசினார். மாநில துணை செயலாளர் தவமணி, மாநில மகளிர் அணி செயலாளர் ஜெயலட்சுமி பாலு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் முனிரத்தினம், மாநில பொறுப்பாளர் பாபு, இளம்புயல் பாசறை மாவட்ட செயலாளர் வசந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். 

Next Story