மாவட்ட செய்திகள்

மணல் திட்டுக்களால் படகுகள் சேதம் செருதூர் வெள்ளையாற்றை தூர்வார வேண்டும் மீனவர்கள் வலியுறுத்தல் + "||" + The fishermen insisted that the boats were damaged by sand ladders

மணல் திட்டுக்களால் படகுகள் சேதம் செருதூர் வெள்ளையாற்றை தூர்வார வேண்டும் மீனவர்கள் வலியுறுத்தல்

மணல் திட்டுக்களால் படகுகள் சேதம் செருதூர் வெள்ளையாற்றை தூர்வார வேண்டும் மீனவர்கள் வலியுறுத்தல்
மணல் திட்டுக்களால் படகுகள் சேதம் அடைவதால் செருதூரில் உள்ள வெள்ளையாற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வேளாங்கண்ணி,

நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி, செருதூர் உள்ளிட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் 1,200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். மீனவர்கள் செருதூரில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்கு தளத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றுவிட்டு, பின்னர் இறங்கு தளத்திற்கு வந்து மீன்களை இறக்குகின்றனர். செருதூரில் உள்ள மீன் இறங்க தளத்தில் இருந்து கடலுக்கு செல்வதற்கும், கடலில் இருந்து மீன் இறங்குதளத்திற்கும் வருவதற்கும் அங்குள்ள வெள்ளையாற்றின் வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த ஆறு கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது.


மணல் திட்டுக்கள்

இதனால் தற்போது இந்த வெள்ளையாற்றின் கடல் முகத்துவாரத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலம் வரையில் ஆற்றில் மணல் திட்டுக்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் படகு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சில சமயங்களில் படகுகள் மணல் திட்டுக்களில் மோதி சேதமடைகின்றன. மேலும், தற்போது படகுகள் மீன்இறங்கு தளத்திற்கு வர முடியாமல் நடுஆற்றிலேயே நிறுத்தப்படுகிறது. இதனால் பிடித்து வரும் மீன்களை கரைக்கு கொண்டு வருவதில் சிரமம் ஏற்படுவதுடன், செலவும் அதிகமாகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெள்ளையாற்றை தூர்வாரி படகுகள் சிரமமின்றி கடலுக்கு சென்று வர நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வேளாங்கண்ணி, செருதூரை சேர்ந்த மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

1. பாதாள சாக்கடை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் பா.ஜனதா கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று பா.ஜனதா கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
2. கடலில் மாயமான மீனவரை தேட நடவடிக்கை எடுக்காததால் அரசியல் கட்சி கொடிகளை இறக்கி மீனவர்கள் போராட்டம்
கடலில் மாயமான மீனவரை தேட நடவடிக்கை எடுக்காததால் தொடுவாய் கிராம மீனவர்கள் அரசியல் கட்சி கொடிகளை இறக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
3. புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வேண்டும் கலெக்டரிடம், பொதுமக்கள் வலியுறுத்தல்
திருவிடைமருதூர் அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக்கடையை உடனே மூட வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
4. மீனவர்கள் வேலை நிறுத்தம்: ரூ.10 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு
மீனவர்களின் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.10 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
5. தொண்டி அருகே மீனவர்கள் வலையில் சிக்கிய அபூர்வ ஆமை
ராமநாதபுரம் மாவட்டம் தாமோதரன்பட்டினம் அருகே கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் அபூர்வ ஆமை சிக்கியது.