மாவட்ட செய்திகள்

விராலிமலை அருகே தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி + "||" + Motorcycle clash in the wall of the wall near Viralimalai; Worker killed

விராலிமலை அருகே தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி

விராலிமலை அருகே தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி
விராலிமலை அருகே சாலை நடுவே உள்ள தடுப்புசுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள குளவாய்ப்பட்டியை சேர்ந்தவர் நந்தகோபால்(வயது 44). தொழிலாளி. இவர் நேற்று காலை சொந்த வேலை காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் குளவாய்ப்பட்டியில் இருந்து ரெட்டியபட்டிக்கு சென்றார். பின்னர் அங்கு வேலையை முடித்து விட்டு அதே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். விராலிமலை அருகே உள்ள விராலூர் பகுதியில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது சாலையின் நடுவே உள்ள தடுப்புசுவற்றில் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.

தொழிலாளி பலி

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட நந்தகோபால் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் விராலிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நந்தகோபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. குட்டையில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி மற்றொருவரின் கதி என்ன?
குன்னம் அருகே குட்டையில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மற்றொரு மாணவரின் கதி என்ன? என்பது தெரியவில்லை.
2. மின்கம்பி அறுந்து விழுந்ததால் குளத்தில் மின்சாரம் பாய்ந்து 6 பேர் பலி
அசாம் மாநிலம் நகவுன் மாவட்டம் காடோவல் என்ற இடத்தில் ஒரு குளம் உள்ளது. அதன் மேலே 11 ஆயிரம் வோல்ட் மின்சாரம் செல்லும் உயர் அழுத்த மின்கம்பி செல்கிறது.
3. ஆட்டோ மீது லாரி மோதல் : 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி
நாக்பூர் அருகே ஆட்டோ மீது லாரி மோதியதில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியானார்கள்.
4. குடிசையில் தீ விபத்து: உடல் கருகி மூதாட்டி பரிதாப சாவு
போச்சம்பள்ளி அருகே குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
5. புளியந்தோப்பில் பரிதாபம்: தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலி
புளியந்தோப்பில், தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.