மாவட்ட செய்திகள்

பெரம்பலூர்-அரியலூரில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் + "||" + The Jato-Geo group demonstrated at Perambalur-Ariyalur

பெரம்பலூர்-அரியலூரில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்-அரியலூரில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்-அரியலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூர்,

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் நேற்று மாலை பெரம்பலூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அருள்ஜோதி, ராமர், கலியமூர்த்தி, தயாளன் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட முன்னாள் தலைவர் ஆளவந்தார் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.


தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் சின்னசாமி, செயலாளர் மதியழகன், தமிழ்நாடு கல்லூரி பேராசிரியர்கள் கழகத்தின் மாவட்ட தலைவர் ராமராஜ் ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், 21 மாத ஊதிய நிலுவை தொகையை உடனடியாக ரொக்கமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே நேற்று மாலை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் அரியலூர் மாவட்ட தலைவர் பஞ்சாபிகேசன் தலைமை தாங்கினார். 


தொடர்புடைய செய்திகள்

1. கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ரெயில் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஜங்ஷன் ரெயில்வே கோட்ட அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
2. 2-வது நாளாக கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்
அரியலூர் கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தினர் 2-வது நாளாக அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
3. சென்னையில் 13-ந் தேதி ஆர்ப்பாட்டம்: ‘பிளாஸ்டிக்’ தடையை நீக்க கோரி வழக்கு
‘பிளாஸ்டிக்’ தடையை நீக்கக்கோரி கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்றும், சென்னையில் 13-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
4. இ-சேவை மைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு சார்பில் கேபிள் டி.வி. நிறுவனம், இ-சேவை மற்றும் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
5. விழுப்புரத்தில்; மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மின்சார சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.