மாவட்ட செய்திகள்

கர்நாடக மேல்-சபை தேர்தல்: இன்று ஓட்டு எண்ணிக்கை + "||" + Karnataka Assembly elections Today vote count

கர்நாடக மேல்-சபை தேர்தல்: இன்று ஓட்டு எண்ணிக்கை

கர்நாடக மேல்-சபை தேர்தல்: இன்று ஓட்டு எண்ணிக்கை
கர்நாடக மேல்-சபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
பெங்களூரு,

கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதா உறுப்பினர்கள் சங்கரமூர்த்தி, ராமச்சந்திரகவுடா, அமர்நாத் பட்டீல், கணேஷ் கார்னிக், ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர்கள் ரமேஷ்பாபு, மரிதிப்பேகவுடா ஆகியோரின் பதவி காலம் நிறைவடைகிறது. இதையடுத்து கர்நாடக தென்கிழக்கு, கர்நாடக தென்மேற்கு, கர்நாடக தெற்கு ஆசிரியர் தொகுதிகள், கர்நாடக தென்மேற்கு, கர்நாடக வடகிழக்கு, பெங்களூரு பட்டதாரி தொகுதிகளுக்கு 8-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.


அதன்படி மேற்கண்ட 6 தொகுதிகளில் கடந்த 8-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்குச்சீட்டு முறையில் இந்த தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் அடங்கிய வாக்கு பெட்டிகள் பெங்களூரு ஆர்.சி.கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கர்நாடக மேல்-சபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. வாக்குச்சீட்டு முறை என்பதால், இறுதி முடிவு நாளை(புதன்கிழமை) தான் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடக மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு
கர்நாடக மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த தேர்தலில் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து பா.ஜனதா விலகியது.
2. ஒரு ஆண்டுக்கு தமிழகத்துக்குத் தர வேண்டிய தண்ணீரை மூன்று மாதத்தில் தந்துவிட்டோம்- கர்நாடகா
காவிரியில் இருந்து ஒரு ஆண்டுக்கு தமிழகத்துக்குத் தர வேண்டிய தண்ணீரை மூன்று மாதத்தில் தந்துவிட்டோம், இனி மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடகா வலியுறுத்தியுள்ளது.