தாராவி மறுசீரமைப்பு திட்டத்துக்கு உதவ துபாய் நிறுவனம் விருப்பம்


தாராவி மறுசீரமைப்பு திட்டத்துக்கு உதவ துபாய் நிறுவனம் விருப்பம்
x
தினத்தந்தி 12 Jun 2018 5:07 AM IST (Updated: 12 Jun 2018 5:07 AM IST)
t-max-icont-min-icon

தாராவி மறுசீரமைப்பு திட்டத்துக்கு உதவ துபாய் நிறுவனம் விருப்பம் தெரிவித்து உள்ளதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்து உள்ளார்.

மும்பை,

இது குறித்து மராட்டிய முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது. முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அமெரிக்கா மற்றும் கனடாவில் ஒருவார சுற்றுப்பயணம் மேற்கொள் வதற்காக மும்பையில் இருந்து விமானம் மூலம் நேற்றுமுன்தினம் புறப்பட்டு சென்றார்.

வழியில், துபாய் சென்ற அவரை ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்திய தூதர் நவ்தீப் புரி வரவேற்றார். அங்கு, துபாய் மன்னர் வம்சத்தை சேர்ந்தவரான பிரபல எம்.பி.எம். நிறுவனத்தின் தலைவர் முகமது பின் ஜூமா அல் மக்டோமை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது மராட்டிய மாநில நகர்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுடன் சேர்த்து, தாராவி குடிசைப்பகுதி மறுசீரமைப்பு திட்டத்துக்கு உதவ முகமது பின் ஜூமா அல் மக்டோம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் விருப்பம் தெரிவித்தார்.

துபாயில் டி.பி.வேல்டு குரூப் சேர்மன் சுல்தான் அகமது பின் சுலாயெம், தும்பே குரூப் நிறுவன தலைவர் தும்பே மொய்தீன் ஆகியோரையும் சந்தித்து பேசினார். அப்போது, டி.பி.வேல்டு குரூப் மராட்டியத்தில் மாநில அரசுடன் சேர்ந்து தளவாட பூங்காக்கள் அமைக்கவும், தும்பே குரூப் சுகாதார திட்ட பணிகளை செய்யவும் ஆர்வம் தெரிவித்தன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story