கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சுகாதார பணியாளர்கள் போராட்டம்
தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் தங்களது 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தினர்.
மதுரை.
தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் தங்களது 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டர் வீரராகவராவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், மத்திய–மாநில அரசுகள் மற்றும் மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும், 25 ஆண்டு காலமாக தொகுப்பூதிய அடிப்படையில் பணி செய்து வரும் சுகாதாரம், பம்ப் ஆபரேட்டர்களுக்கு கால முறை சம்பளம் வழங்க வேண்டும், ஒப்பந்த பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் இடம் பெற்று இருந்தன.
Related Tags :
Next Story