ராகுல் காந்தி இன்று மும்பை வருகை


ராகுல் காந்தி இன்று மும்பை வருகை
x
தினத்தந்தி 12 Jun 2018 5:24 AM IST (Updated: 12 Jun 2018 5:24 AM IST)
t-max-icont-min-icon

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (செவ்வாய்க்கிழமை) மும்பை வருகை தருகிறார்.

மும்பை,

மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள கண்காட்சி மையத்தில் நடக்கும் கட்சிக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அப்போது, கட்சி தொண்டர்களை ஊக்கப்படுத்தும் ‘சக்தி’ எனும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் படி மேல்மட்ட தலைவர்களுடன் கட்சி தொண்டர்கள் நிரந்தர தகவல் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மும்பை வரும் ராகுல் காந்தியை வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளனர். 1,000 ஆட்டோ டிரைவர்கள் அவரை வரவேற்க உள்ளனர்.

இந்த நிலையில் மகாத்மா காந்தி கொலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக அவர் மீது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தொடர்ந்த வழக்கு இன்று பிவண்டி கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இதனால் காலை 11 மணி அளவில் அவர் கோர்ட்டில் நேரில் ஆஜராவார் என்று தெரிகிறது.

Next Story