தமிழக அரசு நிறுவனத்தில் வேலை
தமிழக அரசு குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தில் அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை நிறுவனம் சுருக்கமாக ஐ.சி.டி.எஸ். என அழைக்கப்படுகிறது. தமிழக அரசு அமைப்பான இது பள்ளி முன்பருவ கல்வி, 6 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான ஆரம்பகால ஆரோக்கிய திட்டங்கள், சத்துணவு கிடைக்கச் செய்தல் போன்ற நோக்கங்களுக்காக செயல்படுகிறது.
தமிழக அரசு இந்தத் திட்டத்தை அங்கன்வாடி மையங்களுடன் இணைத்து செயல்படுத்தி வருகிறது. தற்போது இந்த அமைப்பில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. 5 மாவட்டங்களில், 64 பிளாக்குகளில் மொத்தம் 149 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
ஸ்பெஷலிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், அக்கவுண்டன்ட், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், திட்ட உதவியாளர்கள் போன்ற அதிகாரி மற்றும் அலுவலர் பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் உள்ள காலியிடங்கள் விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். இவை ஒப்பந்த அடைப்படையிலான (காண்டிராக்ட்) பணியிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
1-5-2018-ந் தேதியில் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணி உள்ளது. தமிழக அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மற்றும் இளநிலை, முதுநிலை பட்டதாரிகளுக்கு பணியிடங்கள் உள்ளன. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நன்றாக எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.icds.tn.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் விவரங்களை, நிரப்பி தேவையான சான்றுகள் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் “Director cum Mission Director,Integrated Child Development Project Schemes, No.6, Pammal Nalla Thambi Street, M.G.R. Road, Taramani, Chennai- 113” என்ற முகவரிக்கு, 18-6-2018-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களையும் மேற்குறிப்பிட்டுள்ள இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story