மாவட்ட செய்திகள்

முப்படை அதிகாரி பணிகளுக்கு 383 இடங்கள் + "||" + For the officers of the army 383 seats

முப்படை அதிகாரி பணிகளுக்கு 383 இடங்கள்

முப்படை அதிகாரி பணிகளுக்கு 383 இடங்கள்
இந்திய ராணுவ அகாடமிகளில் 383 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பிளஸ்-2 படித்தவர்கள் இதில் சேர விண்ணப்பிக்கலாம்.
ராணுவத்தின் முப்படை பிரிவுகளில் அதிகாரி பணியிடங்களை நிரப்ப, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிகளுக்கான தேர்வு-2018 (2) (சி.டி.எஸ். தேர்வு) மூலம் இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள். மொத்தம் 383 பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது.

இதில் இந்திய மிலிட்டரி அகாடமியில் 208 பேரும், இந்திய கடற்படை அகாடமியில் 39 பேரும், விமானப்படை அகாடமியில் 92 பேரும், கடற்படை அகாடமியில் (பிளஸ்-2 சிறப்பு சேர்க்கையில்) 44 பேரும் சேர்க்கப்படுகிறார்கள். பயிற்சியுடன் கூடிய இந்த அதிகாரி பணியிடங்களில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

ராணுவ மிலிட்டரி அகாடமி மற்றும் கடற்படை அகாடமி பணி விண்ணப்பதாரர்கள் 2-1-2000 மற்றும் 1-1-2003 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். கமர்சியல் பைலட் லைசென்ஸ் பெற்றவர்களுக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:

ராணுவ மிலிட்டரி அகாடமி விண்ணப்பதாரர்கள் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விமானப்படை அகாடமி, கடற்படை அகாடமியில் சேருபவர்கள் பள்ளிப்படிப்பில் இயற்பியல், கணிதம் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்து பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்து தேர்வு, உளவியல் திறன் தேர்வு, நுண்ணறிவுத் திறன் தேர்வு, ஆளுமைத் திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பதாரர் உடல்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்:

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் தவிர்த்த மற்றவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். பார்ட்-1 விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு கட்டணம் செலுத்திவிட்டு, பார்ட்-2 விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதி:

ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 2-7-2018.

கூடுதல் விவரங்களை பார்க்க www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம். 

ஆசிரியரின் தேர்வுகள்...