கலெக்டர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு


கலெக்டர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு
x
தினத்தந்தி 13 Jun 2018 3:00 AM IST (Updated: 12 Jun 2018 7:59 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதி மொழியினை கலெக்டர் தலைமையில் அரசு அலுவலர்கள் ஏற்று கொண்டனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதி மொழியினை கலெக்டர் தலைமையில் அரசு அலுவலர்கள் ஏற்று கொண்டனர்.

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு

குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12–ந்தேதி, உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த நாளில் அனைத்துத்துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.

உறுதிமொழி ஏற்பு

அதன்படி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமையில், தேசிய குழந்தை மற்றும் வளர் இளம் பருவத்தினர் தொழிலாளர் திட்டத்தின் கீழ, குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதி மொழியினை, அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் எடுத்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி குழந்தை தொழிலாளர் முறையினை ஒழிப்பதற்கான, கையெழுத்து இயக்கத்தில், கையெழுத்திட்டு விழிப்புணர்வு பணிகளை தொடங்கி வைத்தார்

யார்–யார்?

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் பிரசாந்த், குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் ஆதிநாராயணன், குழந்தை தொழிலாளர் திட்ட மேலாளர் செல்வம், தொழிலாளர் உதவி ஆணையர் பாலமுருகன், குழந்தைத் தொழிலாளர் திட்ட கணக்கர் கோமதி, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் காசிராஜன், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் ரவிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story