தனியார் பஸ்சை வழிமறித்து டிரைவரை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி 8 பேர் கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
தூத்துக்குடி அருகே தனியார் பஸ்சை வழிமறித்து டிரைவரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற 8 பேர் கும்பலுக்கு போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே தனியார் பஸ்சை வழிமறித்து டிரைவரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற 8 பேர் கும்பலுக்கு போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
பஸ் டிரைவர்தூத்துக்குடி சாயர்புரம் அருகே உள்ள சிவத்தையாபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் தினேஷ் (வயது 33). தனியார் பஸ் டிரைவர்.
இவர் நேற்று முன்தினம் மாலையில் தூத்துக்குடியில் இருந்து குலையன்கரிசல் நோக்கி பஸ்சை ஓட்டி சென்றார். பஸ் கூட்டாம்புளி– குலையன்கரிசல் ரோட்டில் சென்று கொண்டு இருந்த போது, கூட்டாம்புளி அருகே மர்ம மனிதர்கள் 8 பேர் பஸ்சை வழிமறித்தனர்.
திடீரென அவர்கள், தினேசை தாக்கி கத்தியால் குத்தி சரமாரியாக குத்தினர்.
குத்தி கொல்ல முயற்சிஅவரை மீண்டும் கத்தியால் குத்தி கொல்ல முயன்றதை பார்த்த பயணிகள் அலறினர். இதை தொடர்ந்து பயணிகளை அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி விட்டு பஸ்சில் இருந்து இறங்கி தப்பி சென்று விட்டனர். இதில் காயம் அடைந்த தினேஷ் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து தினேஷ் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஞானராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.