மாவட்ட செய்திகள்

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை + "||" + The girl jumped into the well and committed suicide

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
துரிஞ்சாபுரம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கலசபாக்கம்

துரிஞ்சாபுரம் ஒன்றியம் மருத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 28). இவர் சென்னையில் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் கலசபாக்கத்தை அடுத்த சீராம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பரமேஸ்வரி (25) என்ற பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் மகளும், 2 வயதில் மகனும் உள்ளனர்.

சண்முகம் பணிநிமித்தமாக சென்னைக்கு சென்று விட்டார். வீட்டில் பரமேஸ்வரி மற்றும் அவரது குழந்தைகள், சண்முகத்தின் தாயார் பூங்காவனம், தந்தை சின்னப்பா ஆகியோருடன் வசித்தனர். இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் போனில் பேசியபோதும் தகராறு செய்து கொள்வார்களாம்.

இதனால் மனம் உடைந்த பரமேஸ்வரி சம்பவத்தன்று அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பரமேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பரமேஸ்வரியின் தாயார் வெண்ணிலா திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் “எனது மகளிடம் 5 பவுன் நகை கேட்டு கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தி உள்ளனர். இதனால் தான் எனது மகள் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டாள். எனவே இது குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் பரமேஸ்வரிக்கும், சண்முகத்திற்கும் திருமணம் முடிந்து 5 வருடங்கள் தான் ஆவதாலும், வரதட்சணை கொடுமை செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளதாலும் அது குறித்து திருவண்ணாமலை உதவி கலெக்டர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சன்னிதானத்துக்கு பாதி தூரம் சென்ற பெண் : தொடர்ந்து செல்ல முடியாமல் திரும்பினார்
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் சன்னிதானத்திற்கு பாதி தூரம் வரை சென்ற 40 வயது பெண், அய்யப்ப பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் அவர் மேற்கொண்டு பயணம் செய்ய முடியாமல் திரும்பினார்.
2. பெண்கள் அனுமதியை எதிர்த்து பெண் தற்கொலை முயற்சி
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. அங்கு பெண்களை அனுமதிக்கும் உத்தரவை எதிர்த்து ஒரு பெண் தற்கொலைக்கு முயன்றார்.
3. சேலம்: பெண் மீது திராவகம் வீச்சு - கள்ளக்காதலன் கோர்ட்டில் சரண்
சேலத்தில் பெண் மீது திராவகம் வீசிய கள்ளக்காதலன் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
4. ஜெர்மனி: பெண், பிணைக்கைதியாக பிடிபட்டதால் பரபரப்பு - ரெயில் நிலையம் மூடப்பட்டது
ஜெர்மனியில் பெண் ஒருவர் பிணைக்கைதியாக பிடிபட்டதால், ரெயில் நிலையம் மூடப்பட்டது.
5. பாலியல் உறவுக்கு சம்மதிக்குமாறு பெண் மிரட்டியதால் வாலிபர் தற்கொலை
பாலியல் உறவுக்கு சம்மதிக்குமாறு பெண் மிரட்டியதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.