ஆரணி அருகே சுற்றுச்சுவர் இல்லாத பள்ளிக்குள் புகுந்து இரவில் தினமும் குடிமகன்கள் அட்டகாசம்


ஆரணி அருகே சுற்றுச்சுவர் இல்லாத பள்ளிக்குள் புகுந்து இரவில் தினமும் குடிமகன்கள் அட்டகாசம்
x
தினத்தந்தி 13 Jun 2018 4:15 AM IST (Updated: 12 Jun 2018 11:53 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாத தால் தினமும் குடி மகன்கள் புகுந்து பள்ளி வளாகத்திலேயே மது குடித்த பின்னர் காலி பாட்டில்களையும், தின்று தீர்த்தபின் வீணான உணவை குப்பையாகவும் வீசிச்செல்கின்றனர்.

ஆரணி

ஆரணியை அடுத்த இரும் பேடு ஊராட்சிக்கு உட்பட்ட அரிகரன் நகர் பகுதியில் ஆற்காடு செல்லும் சாலை யில் அரசினர் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை. இதனால் பள்ளி செயல் படாத நேரங்களில் வெளியாட்கள் தாராளமாக உள்ளே சென்று விடுகின்ற னர்.

இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாததால் பள்ளி வளாகத்திலேயே குடிமகன்கள் அட்டகாசத்தில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மது குடித்து விட்டு காலி பாட்டில்களை ஆங்காங்கே போட்டு விடுகின்றனர். அவர்களுக்கு வசதியாக அங்கு துரித உணவகங்களும் அதிகரித்து வருகின்றன. அந்த பள்ளி உள்ள சாலையில் 50-க்கும் மேற்பட்டோர் இந்த உணவகங்களை அமைத்துள் ளனர்.

இவர்களிடம் துரித உணவை வாங்கும் குடிமகன்கள் மது குடிக்கும்போது அவற்றை தின்று விட்டு போதை ஏறியதும் காலி பாட்டில்களு டன் வீணான உணவை வீசுகின்றனர். எலும்பு துண்டு, குப்பைகள், மதுபாட்டில்களை பள்ளிவளாகத்திலேயே அவர்கள் வீசுகின்றனர். சிலர் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு அங்கேயே வாந்தி எடுத்து பள்ளி வளாகத்தை அசுத்தமாக்குகின்றனர். காலையில் வரும் மாணவர் களுக்கு இதனை அகற்றுவதே வேலையாகி விட்டது.

இந்த சம்பவங்கள் பெற்றோரை வேதனைக் குள்ளாக்கி வருகிறது. மது குடிப்பவர்களையும் அவர் களால் கண்டிக்க முடிய வில்லை. எனவே மாணவர் களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாவட்ட கல்வித் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்துத் தரவும், பள்ளிக்கு இரவுக் காவலர் அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story