மாவட்ட செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது + "||" + The central government has full powers to carry out the Cauvery Management Authority

காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது

காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது
காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது என புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
நாகூர்,

புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று முன்தினம் நாகை மாவட்டம் நாகூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதைதொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் உறுப்பினர்களை அறிவித்துள்ளது. ஆனால் கர்நாடக அரசு உறுப்பினர்களை அறிவிக்கவில்லை. ஆனால் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க கர்நாடக அரசு குழு உறுப்பினர்களை அறிவிக்க மத்திய அரசு எதிர்பார்க்க தேவையில்லை.

காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல் பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது. தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களை அரசுத்துறைகளில் இணை செயலாளர்களாக நியமிக்கலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு மிகமோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மத்திய அரசு நிர்வாக சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார அமைப்புகளை அரசுத்துறைகளில் உள்ளே கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. அரசு நிர்வாகத்தை தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவர பாரதீய ஜனதா கட்சி அரசு முயற்சி செய்கிறது. ஆனால் இதனை ஒருபோதும் புதுச்சேரி அரசு ஏற்றுக்கொள்ளாது. இவ்வாறு அவர் கூறினார்.