மாவட்ட செய்திகள்

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1,800 கனஅடி தண்ணீர் வருகிறது + "||" + Heavy rain in Cauvery watersheds: Hogan comes to 1,800 cubic feet per second

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1,800 கனஅடி தண்ணீர் வருகிறது

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1,800 கனஅடி தண்ணீர் வருகிறது
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1,800 கனஅடி தண்ணீர் வருகிறது. நீர்வரத்தை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
பென்னாகரம்,

கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை படிப்படியாக குறையத்தொடங்கியது. மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,800 கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தது.


இந்த தண்ணீர், ஒகேனக்கல் பிரதான மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இவர்கள் அருவிகள் மற்றும் காவிரி கரையோரம் குளித்தனர். பின்னர் அவர்கள் பார்வை கோபுரம், தொங்குபாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று காவிரி ஆற்றின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பரிசலில் சென்றனர்.

கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் இன்னும் ஒரு சில நாட்களில் ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கர்நாடகா, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை அளந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவி, நடைபாதை மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. விழுப்புரத்தில் பரபரப்பு: எக்ஸ்பிரஸ் ரெயிலில் தண்ணீர் இல்லாததால் பயணிகள் திடீர் போராட்டம்
எக்ஸ்பிரஸ் ரெயிலில் தண்ணீர் வசதி இல்லாததால் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தி பயணிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
2. செங்கல் சூளை அமைக்க அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் துரை.சந்திரசேகரன் பேட்டி
கொள்ளிடம் ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் ஆற்றங்கரையில் செங்கல் சூளை அமைக்க அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. கூறினார்.
3. அதிக அளவு தண்ணீர் செல்வதால் வீரசோழனாற்றின் குறுக்கே இருந்த நடைபாலம் அடித்து செல்லப்பட்டது
பொறையாறு அருகே அதிக அளவு தண்ணீர் செல்வதால் வீரசோழனாற்றின் குறுக்கே இருந்த நடைபாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் ஆற்றை சுற்றி செல்ல வேண்டிய நிலை இருப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
4. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கரையோர பகுதிகளில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அந்த பகுதியில் ஆய்வு நடத்திய அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
5. தரங்கம்பாடி தாலுகா வாய்க்கால்களில் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்
தரங்கம்பாடி தாலுகா பகுதியில் உள்ள வாய்க்கால்களில் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா. கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.