7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்கள் தர்ணா


7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்கள் தர்ணா
x
தினத்தந்தி 12 Jun 2018 11:00 PM GMT (Updated: 12 Jun 2018 9:51 PM GMT)

திண்டுக்கல்லில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய அலுவலகம் முன்பு ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர் கள் ஓய்வூதிய பணப்பலன் களை விரைவாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக அவ்வப்போது போராட்டமும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.

இதற்கு மாவட்ட தலைவர் நல்லக்கண்ணு தலைமை தாங்கினார். மாநில செயலாளர் செல்வராஜ், மாவட்ட தலைவர் அர்ஜூனன், பொருளாளர் ராயப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். இதில் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற அலுவலர்கள், ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தின் போது மின்வாரியத்தின் 60-வது ஆண்டை முன்னிட்டு சலுகை தொகை வழங்க வேண்டும். 1.12.2015-க்கு பின்னர் ஓய்வுபெற்ற அனைத்து மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்களுக்கும் முழுமையான பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக் கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை வாரிய உத்தரவுபடி செயல்படுத்த வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வு பெற்றவர் களுக்கு அனைத்து பணப்பலன்களையும் முழுமையாக வழங்க வேண்டும். ஊழியர் களுக்கு புதிய சம்பள நிர்ணயம் செய்து நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Next Story