வேலூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


வேலூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Jun 2018 3:53 AM IST (Updated: 13 Jun 2018 3:53 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில துணைசெயலாளர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். டாஸ்மாக் ஊழியர் சங்க (சி.ஐ.டி.யு.) மாவட்ட பொதுச்செயலாளர் பழனி, பாட்டாளி தொழிற்சங்க தலைவர் அன்புசக்தி, டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் சுந்தர்விஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலாளர் முன்னேற்ற சங்க துணைசெயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

இதில், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், பணிமூப்பு அடிப்படையில் அரசுதுறைகள் மற்றும் டாஸ்மாக் நிறுவனத்தில் உள்ள நிரந்தர காலிப்பணியிடங்களில் பணி தொடர்ச்சியுடன் மாற்றுப்பணி வழங்க வேண்டும், டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் மருத்துவ சிகிச்சையை இ.எஸ்.ஐ. மருத்துவ திட்டத்தில் இணைக்க வேண்டும், பணியின்போது மரணம் அடைந்த ஊழியர்களின் குடும்பத்தாருக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும், நிறுத்தப்பட்ட ஊக்கத்தொகையை நிலுவையுடன் தொடர்ந்து வழங்க வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் ஊழியர் சங்க (சி.ஐ.டி.யு.) தலைவர் காசிநாதன், பொருளாளர் வேல்முருகன், பாட்டாளி தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story