சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது


சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 13 Jun 2018 4:23 AM IST (Updated: 13 Jun 2018 4:23 AM IST)
t-max-icont-min-icon

சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தலைவாசல்,

தலைவாசல் அருகே உள்ள மணிவிழுந்தான் காலனியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 58). இவர் தேவியாக்குறிச்சி சுடுகாட்டுப்பகுதியில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையறிந்த போலீசார் அங்கு சென்று, லோகநாதனை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த 113 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் அவர் மீது தலைவாசல், ஆத்தூர் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் சாராய வழக்குகள் உள்ளன. எனவே அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜி ஜார்ஜ், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து கலெக்டர் ரோகிணி, சாராய வியாபாரி லோகநாதனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். உத்தரவு நகல், சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

Next Story