மாவட்ட செய்திகள்

கலெக்டர் ரோகிணி தலைமையில் ஜமாபந்தி + "||" + Jamapanti headed by Collector Rohini

கலெக்டர் ரோகிணி தலைமையில் ஜமாபந்தி

கலெக்டர் ரோகிணி தலைமையில் ஜமாபந்தி
கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் ரோகிணி தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது.
கெங்கவல்லி,

கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி 3-வது நாளாக நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். இதில், கெங்கவல்லி வடக்கு, தெற்கு, ஆணையம்பட்டி, தெடாவூர் வடக்கு, தெற்கு, நடுவலூர் வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


ஜமாபந்தியில் 480 மனுக்கள் பெறப்பட்டன. இந்த ஜமாபந்தி இன்னும் 2 நாட்கள் நடைபெறுகிறது. இதில் கெங்கவல்லி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இந்திராவுக்கு உடனடியாக மூன்று சக்கர சைக்கிள் வழங்கிட கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டார். பின்னர் அனைத்து மனுக்களையும் பெற்று உடனடியாக தீர்வு காணவேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் தாசில்தார் வரதராஜன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.