மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றவர் ஜீப் மோதி சாவு + "||" + Near Kancheepuram He tried to cross the road on a motorbike Jeep murders death

காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றவர் ஜீப் மோதி சாவு

காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றவர் ஜீப் மோதி சாவு
காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றவர் ஜீப் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சீபுரம்,

வேலூர் மாவட்டம் நெமிலி தாலுகா நங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு (வயது 34). இவரது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த பரசுராமன் (49), லோகேஷ் (25) ஆகியோரை மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார வைத்து கொண்டு செல்வராசு ஓட்டி வந்தார்.


காஞ்சீபுரத்தை அடுத்த பாலுச்செட்டிசத்திரம் பனப்பாக்கம் ஜங்சன் என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்றார். அப்போது ஒரு அரசு ஜீப் மோட்டார் சைக்கிள் மீது கண் இமைக்கும் நேரத்தில் மோதியது.

இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதில் பரசுராமன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

லோகேஷ், செல்வராசு ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வாலிபரை சிக்க வைப்பதற்காக மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை வைத்தவர் கைது
வழக்கில் வாலிபரை சிக்க வைப்பதற்காக அவரது மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை வைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த போலீஸ் ஏட்டு மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
2. மோட்டார் சைக்கிளில் சென்றபோது அரசு பஸ் மோதி பயிற்சி ஆசிரியர் சாவு ‘லிப்ட்’ கேட்டு ஏறி சென்ற மூதாட்டியும் பலியான பரிதாபம்
தலைவாசல் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது அரசு பஸ் மோதியதில் பயிற்சி ஆசிரியர், மூதாட்டி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
3. கோவண்டி அருகே, மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த தாய், மகன் லாரி சக்கரத்தில் சிக்கி சாவு
கோவண்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த தாய், மகன் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
4. சாலையின் குறுக்கே நாய் ஓடியதால் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற கர்ப்பிணி தூக்கி வீசப்பட்டு சாவு
சோழங்குறிச்சி பிரிவு சாலையின் குறுக்கே நாய் ஓடியதால் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற கர்ப்பிணி தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்தனர்.
5. மோட்டார் சைக்கிளில் வேலை தேடி சென்னை வந்த என்ஜினீயர் விபத்தில் சிக்கி சாவு
நாகை மாவட்டத்தில் இருந்து வேலை தேடி மோட்டார் சைக்கிளில் சென்னை வந்த என்ஜினீயர் ஊருக்கு திரும்பும்போது தாம்பரம் அருகே பழுதான லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிக்கி பலியானார்.