மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலை படிப்புக்கு கல்வி கட்டணத்தில் இருந்து விலக்கு துணை வேந்தர் பாஸ்கர் தகவல்
தமிழ் முதுகலை படிப்புக்கு இந்த ஆண்டு முதல் கல்வி கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மனோன்மணியம் சந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் தெரிவித்தார்.
பேட்டை,
தமிழ் முதுகலை படிப்புக்கு இந்த ஆண்டு முதல் கல்வி கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மனோன்மணியம் சந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
தமிழ் முதுகலைப்படிப்புதென் மாவட்டங்களில் தமிழ் முதுகலை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே செல்கிறது. இதனால் தமிழ் வளர்ச்சி தடைபடும் என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கருதுகிறது. தமிழ் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பல்கலைக்கழக தமிழியல் துறையில் கட்டணமில்லா கல்வி இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த ஆண்டு தமிழியல் துறை முதுகலை பட்டப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது இலவச கல்வி வழங்கப்படுகிறது. தமிழ் படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.