மேற்கூரை இல்லை; கழிப்பறை, தண்ணீர் வசதி கிடையாது: பெயரளவுக்கு மட்டுமே காணப்படும் ஐ.ஓ.சி. பஸ் நிலையம், அதிகாரிகள் கவனிப்பார்களா?
சென்னை ஐ.ஓ.சி. பஸ் நிலையம் கழிப்பறை, தண்ணீர் வசதி போன்ற எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் உள்ளது. அங்கு புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பூர்,
சென்னை ஐ.ஓ.சி. மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஐ.ஓ.சி.யில் ஒரு பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தை தினமும் 2500-க்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் இது பஸ் நிலையமா? என்ற கேள்வி அங்கு வரும் பொதுமக்களிடம் நீண்ட காலமாக உள்ளது.
இந்த பஸ் நிலையத்தில் மேற்கூரை ஏதும் இல்லை. பஸ்கள் திறந்த வெளியில் நிறுத்தப்படுகிறது. பஸ் கண்டக்டர், டிரைவர்களுக்கு கழிப்பிடங்கள் இல்லை. ஓய்வு அறைகள், தண்ணீர் வசதி இல்லை. நேர கண்காணிப்பாளர் அறையும் போதிய வசதி இல்லாததால் எப்போதும் மூடப்பட்ட நிலையில் உள்ளது.
மேற்கூரை இல்லாததால் பஸ் நிலையத்திற்கு வரும் பெண்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பொதுமக்கள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் நிற்கும் நிலையே உள்ளது.
வெயில் காலங்களில் ஒரு சிலர் அங்குள்ள மரங்களுக்கு அடியிலும், கடைகளிலும் தஞ்சம் அடைகின்றனர். இதுதவிர மழைக்காலங்களில் இந்த பஸ் நிலையம் தண்ணீரால் சூழப்பட்டு மினி குளமாக காட்சியளிக்கும்.
இதுமட்டுமில்லாமல் பஸ் நிலையத்தை சுற்றி முட்புதர்கள் இருப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் அடிக்கடி பஸ் நிலையத்திற்கு அழையா விருந்தாளியாக உலா வருகின்றன. அந்த பகுதிகளை சுற்றிலும் கொட்டப்படும் குப்பைகளால் எப்போதும் துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
பெயரளவுக்கு மட்டுமே உள்ள இந்த பஸ் நிலையத்தில் இருந்து பஸ்களாவது ஒழுங்காக இயக்கப்படுகின்றனவா? என கேட்டால் அதுவும் இல்லை. இங்கு இருந்து நீதிமன்றத்திற்கு மட்டுமே ஒரு சில பஸ்கள்(தடம் எண்: 44, 44சி) இயக்கப்படுகின்றன. சென்டிரல், கோயம்பேடு மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளுக்கு நேரடியாக பஸ் வசதி இல்லை.
இதனால் மேற்கண்ட பகுதிகளுக்கு பணியிடங்களுக்கு, பள்ளி, கல்லூரிக்கு செல்ல வேண்டுமானால் சென்னை உயர்நீதிமன்ற பஸ் நிலையத்திற்கு வந்தே, அங்கு இருந்து வேறு பஸ்களில் செல்ல வேண்டியதுள்ளது. இதனால் வேலை பார்ப்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.
ஒட்டு மொத்தத்தில் பஸ் நிலையத்துக்கான எந்தவித அடையாளமும் இல்லாமல் இது காட்சியளித்து வருகிறது.
எனவே அங்கு அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய பஸ் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள் கவனிப்பார்களா?.

Related Tags :
Next Story