மாவட்ட செய்திகள்

புதுவை மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகள், கல்லூரிகளை புனரமைக்க 20 கோடி ஒதுக்கீடு நாராயணசாமி தகவல் + "||" + 20 crore allocated for reconstruction of government schools and colleges in Puducherry

புதுவை மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகள், கல்லூரிகளை புனரமைக்க 20 கோடி ஒதுக்கீடு நாராயணசாமி தகவல்

புதுவை மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகள், கல்லூரிகளை புனரமைக்க 20 கோடி ஒதுக்கீடு நாராயணசாமி தகவல்
புதுவை மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகள், கல்லூரிகளை புதுப்பிக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

திருபுவனை,

திருபுவனை அருகே உள்ள சன்னியாசிக்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளி 55 ஆண்டுகள் பழமையானது. இந்த பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர். இந்த நிலையில் திருபுவனை தனியார் நிறுவனத்தின் சார்பில் டெல்லியில் இயங்கி வரும் எப்.எக்ஸ்.பி. இந்தியா சுரக்ஷா என்ற என்.ஜி.ஓ அமைப்பின் உதவியுடன் 32 லட்சம் செலவில் அதிநவீன வகுப்பறைகளுடன் ஆங்கில வழி கல்வியுடன் ஸ்மா£ட் கிளாஸ் தரத்துடன் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த பள்ளியில் சுத்திரிக்கப்பட்ட குடிநீர், மாணவ–மாணவியர்களுக்கு தனித்தனி கழிப்பறைகள், விளையாட்டு மைதானத்தில் குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், மாணவர்களுக்கு ஓய்வு அறைகள், அனைத்து வகுப்பறைகளில் மின் விசிறி வசதிகள், கை கழுவுவதற்கு புதிய குழாய்கள், தேசிய கொடியினை ஏற்றுவதற்கு தனி கொடி மேடை, விழா மேடை, புதிய கரும்பலகைள் என பள்ளி முழுவதும் புதிதாக புனரமைக்கப்பட்டு மாணவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இப்பள்ளி கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் தனராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார்.

விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி மற்றும் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கல்வித்துறை செயலர் அன்பரசு, கல்வித்துறை இயக்குனர் குமார். முதன்மை கல்வி அலுவலர் ரங்கநாதன், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சீத்தாராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது;–

புதுச்சேரி மாநில அளவில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், கல்லு£ரிகளை புனரமைக்க ரூ20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தனியார் நிறுவனங்கள் கிராமபுற அரசு பள்ளிகளை புனரமைத்து ஏழை எளிய மாணவர்களுக்கு அளிக்கும் போது நாட்டின் கல்வித்தரம் உயர்ந்து, கல்வியறிவில் சிறந்த மாநிலமாக புதுச்சேரி திகழும்.

அரசு பள்ளிகள் இதுபோன்று தரம் உயரும் போது தற்போது தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை உயர்ந்துள்ளது. புதுச்சேரி மாநிலம் முழுவதும் 60 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் ஆரம்பிக்க ரூ. 1.25 லட்சம் செலவில் புதுச்சேரியில் 40 பள்ளிகளுக்கும், காரைக்காலில் 20 பள்ளிகளுக்கும் வழங்கியுள்ளோம். இது மேலும் விரிவாக்கம் செய்யப்படும்.

இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

விழாவில் அமைச்சர் கமலக்கண்ணன் பேசியதாவது;–

புதுச்சேரி மாநில அளவில் அரசு பள்ளிகளை தரம் உயர்த்த கடன் பெற்றாவது கல்வித்தரத்தை உயர்த்த அரசு பாடுபடும். தனியார் பள்ளிகளில் உள்ள அனைத்து வசதிகளையும் புதுச்சேரி மாநில அளவில் உள்ள அனைத்து பள்ளிகளையும் கண்காணித்து அடிப்படை தேவைகள் முதல், ஆசிரியர் பற்றாக்குறை வரை போக்கி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும், அரசு பள்ளி மற்றும் கல்லு£ரிகளில் வருகை பதிவேடு முறைகள் மாற்றம் செய்யப்பட்டு மாணவர்களையும், ஆசிரியர்களையும் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதனை மேலும் டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள், திருபுவனை தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஊர் பிரமுகர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

அதனை தொடர்ந்து முதல்–அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் கலைக்கல்லு£ரி, கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப்பள்ளி, மதகடிப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களுக்கு சென்று திடீர் ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது பள்ளி ஆசிரியர்கள் வருகை பதிவேடு, மாணவர்களின் வருகை பதிவேடு, மதிய உணவுக்கூடம், விளையாட்டு திடல்களை முதல்வரும், அமைச்சர், செயலர், இயக்குனர் குழுவினர்ஆய்வு செய்தனர்.


அதிகம் வாசிக்கப்பட்டவை