போலீஸ் எனக்கூறி கத்திமுனையில் பெண்ணிடம் பணம் பறிப்பு 3 பேர் கைது
நங்கவள்ளி அருகே கத்திமுனையில் பெண்ணிடம் பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேச்சேரி,
நங்கவள்ளி அருகே விருதாசம்பட்டி நரியனூர் பகுதியை சேர்ந்தவர் நாகராசன். இவரது மனைவி சரண்யா (வயது 23). இவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தனியாக இருந்த போது 3 பேர் வந்தனர். அவர்கள் நாங்கள் போலீஸ், உங்கள் வீட்டை சோதனை செய்ய வேண்டும் என கூறினர். மேலும் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் சரண்யாவின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் எங்கே வைத்து இருக்கிறாய் என கேட்டு மிரட்டினர்.
மேலும் அவர் வைத்திருந்த ரூ.8 ஆயிரத்து 5்00-யை பறித்துக்கொண்டு, வீட்டை விட்டு வெளியே வந்தனர். அப்போது அங்கு வந்த அவரது கணவர் நாகராசனையும், கத்தியை காட்டி மிரட்டி விட்டு, மோட்டார் சைக்கிளில் தப்பினர். இது குறித்து சரண்யா நங்கவள்ளி போலீசில் புகார் கொடுத்தார்.
3 பேர் கைது
இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தாரமங்கலம் அருகே தொட்டம்பட்டி பைபாஸ் பகுதி சேர்ந்த சேகர் (28), சின்னப்பம்பட்டி பாப்பம்பட்டி பகுதியை சேர்ந்த முருகன் (36) எடப்பாடி வெள்ளாளபுரத்தை சேர்ந்த சரவணன் (25) ஆகிய 3 பேரும் போலீஸ் என கூறி கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றதும், அவர்கள் போலீஸ் இல்லை, நெசவு தொழிலாளர்கள் என்பதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story