மாவட்ட செய்திகள்

ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 15 கிலோ கஞ்சா சிக்கியது போலீசார் விசாரணை + "||" + The police investigated 15 kg ganja in the Alappuzha Express

ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 15 கிலோ கஞ்சா சிக்கியது போலீசார் விசாரணை

ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 15 கிலோ கஞ்சா சிக்கியது போலீசார் விசாரணை
சேலம் வந்த ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 15 கிலோ கஞ்சா சிக்கியது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூரமங்கலம்,

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து சேலம் வழியாக கேரள மாநிலம் ஆலப்புழைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சேலம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையில் ஏராளமான போலீசார் ஜங்சன் ரெயில் நிலையத்தில் அந்த ரெயிலில் சோதனை நடத்த தயாராக இருந்தனர்.

இந்த நிலையில் தன்பாத்-ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 8.20 மணிக்கு முதலாவது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. இதையடுத்து ரெயில்வே போலீசார் பொது பெட்டிகளில் ஏறி சோதனை நடத்தினர். அப்போது ஒரு பொது பெட்டியில் 2 பைகள் கேட்பாரற்று கிடந்தன. இந்த பைகள் யாருடையது? என்று அருகில் இருந்த பயணிகளிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் இந்த பைகள் தங்களுடையது இல்லை என்று தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் அந்த பைகளை எடுத்து சோதனை நடத்தினர். அப்போது அந்த 2 பைகளில் பொட்டலங்களாக 15 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும். இந்த கஞ்சாவை கடத்தி சென்ற மர்ம ஆசாமி யார்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் வரும் வழிகளில் ரெயில்வே நிலையங்களில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள பதிவுகளை போலீசார் ஆராய்ந்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயிலில் மீட்கப்பட்ட கஞ்சா, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் 70 கிலோ கஞ்சா சிக்கியது குறிப்பிடத்தக்கது.