மாவட்ட செய்திகள்

திருடர்களுக்கு பயந்து பாதுகாப்பிற்காக கோவில் கருவறையில் வைத்திருந்த ரூ.5 லட்சம் கொள்ளை + "||" + Rs 5 lakh robbery in the temple sanctuary for fear of thieves

திருடர்களுக்கு பயந்து பாதுகாப்பிற்காக கோவில் கருவறையில் வைத்திருந்த ரூ.5 லட்சம் கொள்ளை

திருடர்களுக்கு பயந்து பாதுகாப்பிற்காக கோவில் கருவறையில் வைத்திருந்த ரூ.5 லட்சம் கொள்ளை
வெள்ளிச்சந்தை அருகே திருடர்களுக்கு பயந்து பாதுகாப்பிற்காக கோவில் கருவறையில் வைத்திருந்த ரூ.5 லட்சம் கொள்ளை போனது. மர்மநபர்களின் துணிகர செயலால் ஓட்டல் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
வெள்ளிச்சந்தை,

குமரி மாவட்டம் பேயோடு பகுதியை சேர்ந்தவர் ராஜீ (வயது 45). இவருடைய மனைவி அமுதா. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ராஜீ பேயோடு சந்திப்பு பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

இவர்களுடைய குடும்ப கோவிலான பத்ரகாளி அம்மன் கோவில் பேயோடு சந்திப்பு அருகில் உள்ளது. இந்த கோவிலுக்கு ராஜீ தினமும் சென்று பூஜைகள் செய்து வருவது வழக்கம்.


திக்கணங்கோடு பகுதியில் உள்ள உறவினர் ஒருவரிடம் ராஜீ சீட்டு போட்டிருந்தார். கடந்த 8-ந் தேதி சீட்டு தொகை ரூ.5 லட்சத்து 20 ஆயிரத்தை வாங்கி வந்தார். பின்னர், அதில் செலவிற்காக ரூ.20 ஆயிரத்தை மட்டும் எடுத்தார். மீதம் இருந்த ரூ.5 லட்சத்தில் நிலம் வாங்க முடிவு செய்தார்.

சுற்று வட்டார பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளையர்கள் பணம், நகைகளை திருடிச்செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்ததால் ராஜீக்கு, வீட்டில் பணத்தை வைத்தால் பாதுகாப்பு இல்லை என்று கருதினார். இதனால் குடும்ப கோவிலில் வைத்தால் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பினார். அதைத் தொடர்ந்து கோவில் கருவறையில் ரூ.5 லட்சத்தை வைத்து விட்டு, தினமும் சென்று வழக்கம் போல் பூஜைகளை செய்து வந்தார்.

இந்தநிலையில் ராஜீ, ஒருவரிடம் நிலத்தை பேசி முடித்துவிட்டு பணம் கொடுப்பதாக கூறினார். அதற்காக நேற்று காலை கோவிலுக்கு சென்றார்.

அப்போது, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, கருவறையில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மற்றும் காணிக்கை பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றிருந்தது தெரிய வந்தது.

பின்னர், இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் கோவிலில் இருந்து அருகில் இருந்த ஒரு கடைக்கு ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

திருடர்களுக்கு பயந்து கோவில் கருவறையில் வைத்திருந்த பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. காரைக்காலில் ரோந்து பணியின் போது சிக்கினர்: கொள்ளைக் கும்பலை சேர்ந்த 2 பேர் கைது
காரைக்காலில் கொள்ளை கும்பலை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களது கூட்டாளிகள் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. நாகர்கோவிலில் துணிகரம்: ஏ.டி.ஜி.பி. அலுவலக பெண் ஊழியர் வீட்டில் 32 பவுன் நகை-ரூ.1 லட்சம் கொள்ளை
நாகர்கோவிலில் ஏ.டி.ஜி.பி. அலுவலக பெண் ஊழியர் வீட்டில் 32 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. ஜன்னலை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.
3. வேப்பனப்பள்ளி அருகே துணிகரம் 2 கோவில்களில் உண்டியலை உடைத்து கொள்ளை மதுக்கடை, மளிகை கடைகளிலும் திருட முயற்சி
வேப்பனப்பள்ளி அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதேபோல் மதுக்கடை மற்றும் மளிகை கடையிலும் திருட முயற்சி நடந்துள்ளது.
4. வெள்ளாற்று பகுதிகளில் சுரண்டப்படும் மணல் கொள்ளை சிதறிக்கிடக்கும் எலும்புகளால் பொதுமக்கள் அச்சம்
அன்னவாசல் அருகே வெள்ளாற்று பகுதிகளில் மணல் கொள்ளைகள் நடைபெறுவதால் வெள்ளாற்று பகுதிகளை ஒட்டியுள்ள சுடுகாடுகளில் ஆங்காங்கே எலும்புக்கூடுகள் சிதறிக்கிடக்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனார்.
5. மதுரை டாக்டர் வீட்டில் கொள்ளை: மூளையாக செயல்பட்ட திருப்பூர் போலீஸ்காரர் கோர்ட்டில் சரண் மேலும் 3 பேர் கைது-ரூ.7 லட்சம் பறிமுதல்
மதுரை டாக்டர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்திற்கு திட்டம் தீட்டி மூளையாக செயல்பட்ட திருப்பூர் போலீஸ்காரர் சரவணக்குமார் நேற்று மதுரை கோர்ட்டில் சரணடைந்தார்.