ஆலங்குடி அருகே ஆலமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
ஆலங்குடி அருகே ஆலமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள செட்டியாப்பட்டியை சேர்ந்தவர் இருதயசாமி. இவரது மகன் ஆனந்த பிரவின் (வயது 22). இவர் நேற்று முன்தினம் சொந்த வேலைநிமித்தமாக தனது மோட்டார் சைக்கிளில் செட்டியாப்பட்டியில் இருந்து புதுக்கோட்டைக்கு சென்றார். பின்னர் அங்கு வேலையை முடித்து விட்டு, அதே மோட்டார் சைக்கிளில் இரவு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். ஆலங்குடி அருகே செட்டியாப்பட்டி விளக்கில் மோட்டார் சைக்கிளை ஆனந்தபிரவின் திரும்பினார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் இருந்த ஆலமரத்தில் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஆனந்தபிரவின் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக சம்பட்டி விடுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆனந்தபிரவினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story