காலமுறை ஊதியம் வழங்கக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


காலமுறை ஊதியம் வழங்கக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Jun 2018 11:00 PM GMT (Updated: 13 Jun 2018 9:35 PM GMT)

காலமுறை ஊதியம் வழங்கக்கோரி திருவாரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

டாஸ்மாக் ஊழியர்களை பணிவரன்முறைப்படுத்தி, அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். உபரி ஊழியர்களுக்கு அவர்களின் கல்வி தகுதி, பணி மூப்பு அடிப்படையில் அரசு துறைகள், டாஸ்மாக் நிறுவனத்தில் உள்ள நிரந்தர காலி பணியிடங்களில் பணி வழங்க வேண்டும். பணி ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சிறப்பு பணமுடிப்பு வழங்க வேண்டும்.

நிறுத்தப்பட்ட ஊக்க தொகையை நிலுவையுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி திருவாரூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் தொழிலாளர்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் லெனின் முன்னிலை வகித்தார். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், நிர்வாகிகள் திருஞானசம்பந்தம், வடிவழகன், சார்லஸ், முத்துவேல், தமிழரசன், மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

Next Story