மாவட்ட செய்திகள்

ரூ.1 லட்சம் மதுபாட்டில்களை ஆட்டோவில் கடத்திய கும்பல் - போலீசாரை கண்டதும் தப்பி ஓட்டம் + "||" + A mob kidnaps Rs 1 lakh of liquor bottles - escaped after seeing police

ரூ.1 லட்சம் மதுபாட்டில்களை ஆட்டோவில் கடத்திய கும்பல் - போலீசாரை கண்டதும் தப்பி ஓட்டம்

ரூ.1 லட்சம் மதுபாட்டில்களை ஆட்டோவில் கடத்திய கும்பல் - போலீசாரை கண்டதும் தப்பி ஓட்டம்
குடியாத்தத்தில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை ஆட்டோவில் கடத்திய மர்ம நபர்கள், போலீசாரை கண்டதும் ஆட்டோவை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
குடியாத்தம்,

குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் கமலக்கண்ணன், ஏழுமலை, ஏட்டுகள் பாபு, செல்லபாண்டியன் உள்ளிட்ட போலீசார் நேற்று அதிகாலை 2 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிச்சனூர் அரசமரம் பகுதியில் இருந்து வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்துமாறு போலீசார் கைகளால் சைகை செய்தனர். ஆனால் ஆட்டோ நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றது.


இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஆட்டோவை துரத்தி சென்றனர். ஆட்டோவில் இருந்த மர்ம நபர்கள் ஆட்டோவை காந்திநகர் பகுதியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் போலீசார் ஆட்டோவில் பார்த்தபோது அட்டை பெட்டிகளில் ஏராளமான மதுபாட்டில்கள் இருந்தன. இதனையடுத்து போலீசார் மதுபாட்டில்களுடன் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

அதைத் தொடர்ந்து போலீசார் குடியாத்தம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குடியாத்தம் சாமியார்மலை காந்திகணவாய் செல்லும் சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார், கடையின் விற்பனையாளர் துரைபாபு, மேற்பார்வையாளர் சரவணன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் டாஸ்மாக் கடைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கடையில் சோதனை செய்தபோது சுமார் ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பிலான 864 குவாட்டர் மதுபாட்டில்கள், 82 பீர் பாட்டில்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. மேலும் கடையில் திருட வந்த மர்ம நபர்கள் தாங்கள் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக கடையின் மின்சார இணைப்பை துண்டித்து பூட்டை உடைத்துள்ளனர்.

இதுகுறித்து டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் சரவணன் கொடுத்த புகாரின்பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.