உடல் எடையை குறைத்தால் பரிசு
சீனாவில் ஊழியர்கள் எடையை குறைத்தால் பரிசாகப் பணம் வழங்கப்படும் என அறிவித்து, ஒருவர் உலகம் முழுவதும் செய்திகளில் இடம்பிடித்து விட்டார்.
சீனாவின் ஸியான் நகரில் இயங்கி வரும் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார் வாங் ஸுபாவோ. தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் எடையை குறைத்தால் பரிசாகப் பணம் வழங்கப்படும் என அறிவித்து, உலகம் முழுவதும் செய்திகளில் இடம்பிடித்து விட்டார்.
‘‘எங்கள் நிறுவனத்தில் நான் உட்பட, அனைவரும் இடத்தை விட்டு அசையாமல் மணிக்கணக்கில் வேலைகளில் மூழ்கி விடுகிறோம். கிடைக்கும் உணவுகளைச் சாப்பிடுகிறோம். இதனால் அளவுக்கு அதிகமாக எடை கூடிவிடுகிறது. பல நோய்களுக்கு ஆளாக நேர்கிறது. எடையைக் குறையுங்கள், ஆரோக்கியமாக உண்ணுங்கள் என்று சொன்னால் யாரும் காதில் வாங்குவதில்லை. அதனால் குறைக்கும் ஒவ்வொரு கிலோ எடைக்கும் 10 ஆயிரம் ரூபாயைப் பரிசாக அறிவித்தோம். உடனே எல்லோருக்கும் எடை குறைப்பில் ஆர்வம் வந்துவிட்டது.
உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுகள் என ஊழியர்கள் ரொம்பவே மாறிவிட்டனர். மார்ச் மாதம் இந்தத் திட்டத்தை ஆரம்பித்தோம். மிக வெற்றிகரமாகச் சென்றுகொண்டிருக்கிறது. அவரவர் எடை குறைப்புக்கு ஏற்றார் போல பரிசுப் பணமும் மாதந்தோறும் வழங்கப்படுகிறது. ஒரு இளம் பெண் இரண்டே மாதங்களில் 20 கிலோ எடையைக் குறைத்து, 2 லட்சம் ரூபாயைப் பரிசாகப் பெற்றுவிட்டார்” என்கிறார் வாங்.
Related Tags :
Next Story