மாவட்ட செய்திகள்

மரத்தோடு மைதானம் + "||" + மரத்தோடு மைதானம்

மரத்தோடு மைதானம்

மரத்தோடு மைதானம்
பெய்ஜிங்கில் உள்ள யுகாய் உயர்நிலைப் பள்ளியின் கால்பந்து மைதானம் வித்தியாசமானது. ஏனெனில் மைதானத்தின் நடுவே பெரிய மரம் பிரமாண்டமாக நிற்கிறது.
அட..! என்ன சார் விஷயம் என்று கேட்டால்... அது 100 ஆண்டுகள் பழமையான மரம் என்கிறார்கள்.

“பள்ளியைச் சுற்றிலும் சரித்திரப் புகழ்பெற்ற கட்டிடங்கள் இருப்பதால், மைதானத்துக்கு இடமே கிடைக்கவில்லை. இறுதியில் பழம்பெரும் தோட்டத்தை விளையாட்டு மைதானமாக மாற்றிக்கொண்டோம். 100 ஆண்டுகள் பழமையான இந்த மரத்தை அகற்ற முயன்றபோது, அரசாங்க அதிகாரிகள் தடுத்துவிட்டனர். வேறு இடத்தில் பெயர்த்து வைக்கும்போது உயிர் பிழைக்கும் சாத்தியமும் குறைவு என்பதால் மரத்தோடு விளையாடுகிறோம்” என்கிறார் பள்ளி நிர்வாகி.