சிலை மனிதர்கள்


சிலை மனிதர்கள்
x
தினத்தந்தி 15 Jun 2018 4:30 AM IST (Updated: 14 Jun 2018 3:07 PM IST)
t-max-icont-min-icon

தினமும் 8 மணி நேரம், வாரத்துக்கு 5 நாட்கள் சிலை போல நிற்கிறார்கள், சிலை மனிதர்கள்.

லண்டன் தெருக்களில் காணப்படும் இந்த சிலை மனிதர்கள், தத்ரூபமாகச் சிலைகளைப் போன்றே காட்சி தருகிறார்கள். உடல் முழுவதும் தங்கம், வெள்ளி நிறங்களில் வண்ணம் பூசிக்கொண்டு வித விதமான முறைகளில் காட்சிஅளிக்கிறார்கள். சிலை போன்று நிற்பதோ, உட்கார்ந்திருப்பதோ கடினம் என்றால், அந்த வழியே செல்பவர்கள் சிலையா, மனிதனா என்று சோதிப்பது அதைவிடக் கஷ்டமாக அமைந்துவிடுமாம். சிலர் முகத்தில் ஓங்கிக் குத்திவிடுவதும் உண்டு. சிலரைக் கீழே தள்ளிவிட்டு, எலும்பு முறிந்த நிகழ்வும் நடந்தது உண்டு என்கிறார்கள், சிலை மனிதர்கள். இருப்பினும் நல்ல வருமானம் வருவதால் பலரும் இந்த வேலையை விரும்பிச் செய்கிறார்கள்.

சுதந்திர தேவி சிலை, விக்டோரியா ராணி, ரோமானிய வீரர்கள் போன்று நிற்கும் சிலை மனிதர்களைக் காண மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டுகிறார்கள். முறையான பயிற்சி எடுத்துக்கொண்டவர்களால் மட்டுமே மனிதச் சிலைகளாக நிற்க முடியுமாம். 

Next Story