நெல்லை அறிவியல் மையத்தில் ஓவியம்– கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


நெல்லை அறிவியல் மையத்தில் ஓவியம்– கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 14 Jun 2018 9:00 PM GMT (Updated: 14 Jun 2018 1:24 PM GMT)

நெல்லை அறிவியல் மையத்தில் ஓவியம்– கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

நெல்லை, 

நெல்லை அறிவியல் மையத்தில் ஓவியம்– கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

ஓவியம், கட்டுரை போட்டி

நெல்லை அறிவியல் மையத்தில் உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு, நேற்று மாணவ–மாணவிகளுக்கு ஓவியம்– கட்டுரை போட்டி நடந்தது. அறிவியல் மைய அலுவலர் முத்துகுமார் தலைமை தாங்கி, போட்டிகளை தொடங்கி வைத்தார். ஓவிய போட்டி 6 முதல் 8–ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், 9 முதல் 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் நடந்தது. கட்டுரை போட்டி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பொதுவாக நடந்தது.

6 முதல் 8–ம் வகுப்பு வரையிலான ஓவிய போட்டியில் அஞ்சனா முதலிடமும், சகாய இக்னேஷியஸ் அஷ்வா 2–வது இடமும், சுவர்ணா, அகிலன் ஆகியோர் 3–வது இடமும் பிடித்தனர். 9 முதல் 12–ம் வகுப்பு வரையிலான பிரிவில் நிவிஷா முதலிடமும், எமிரா மெர்சி 2–வது இடமும், ‌ஷர்மிளா, துளசி கண்ணன் ஆகியோர் 3–வது இடமும் பிடித்தனர்.

கட்டுரை போட்டியில் கரன் லிடியா முதலிடமும், ராகவ், அனுஷா ஆகியோர் 2–வது இடமும், சீஷா, ‌ஷமீரா, வினித்குமார் ஆகியோர் 3–வது இடமும் பிடித்தனர்.

பரிசளிப்பு

பின்னர் பரிசளிப்பு விழா நடந்தது. லைப் லைன் ரத்த வங்கி இயக்குனர் ரமேஷ்குமார் வரவேற்று பேசினார். டாக்டர் காயத்ரி வாழ்த்தி பேசினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி டீன் கண்ணன் பரிசுகளை வழங்கினார்.

திருமலை முருகன், நைனா முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர். அறிவியல் மைய கல்வி உதவியாளர் மாரி லெனின் நன்றி கூறினார்.


Next Story