மாவட்ட செய்திகள்

வல்லநாடு பகுதியில் தலைமை நீரேற்று நிலையத்தில் பழுதடைந்த மின்மாற்றியை உடனடியாக மாற்ற வேண்டும்கீதாஜீவன் கோரிக்கை + "||" + At the power plant at Vallanadu Needless to change the replacement transformer

வல்லநாடு பகுதியில் தலைமை நீரேற்று நிலையத்தில் பழுதடைந்த மின்மாற்றியை உடனடியாக மாற்ற வேண்டும்கீதாஜீவன் கோரிக்கை

வல்லநாடு பகுதியில் தலைமை நீரேற்று நிலையத்தில் பழுதடைந்த மின்மாற்றியை உடனடியாக மாற்ற வேண்டும்கீதாஜீவன் கோரிக்கை
வல்லநாட்டில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் பழுதடைந்த மின்மாற்றியை உடனடியாக மாற்ற வேண்டும் என்று சட்டமன்றத்தில் கீதாஜீவன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்து உள்ளார்.
தூத்துக்குடி, 

வல்லநாட்டில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் பழுதடைந்த மின்மாற்றியை உடனடியாக மாற்ற வேண்டும் என்று சட்டமன்றத்தில் கீதாஜீவன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்து உள்ளார்.

மின்மாற்றி

சட்டமன்ற கூட்டத்தில் தூத்துக்குடி தொகுதி கீதாஜீவன் எம்.எல்.ஏ. பேசினார். அப்போது, தூத்துக்குடி மாநகராட்சி 4–வது குடிநீர் குழாய் திட்டத்துக்காக பிரத்யேகமாக வல்லநாடு தலைமை நீரேற்று நிலையத்தில் ஒரு மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின்மாற்றி கடந்த ஒரு மாதகாலமாக பழுதடைந்து உள்ளது. இதனால் பாளையங்கோட்டை துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் குறைந்த மின்அழுத்தம் மற்றும் சீரான மின்சார வினியோகம் இல்லாததால் தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் வினியோகம் தடைபட்டு வருகிறது. காலதாமதமும் ஏற்படுகிறது.

வாகைகுளம் பகுதியில் கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து வந்த மின்மாற்றியும் ஒரு மாதகாலமாக பழுதடைந்து உள்ளது. வாகைகுளம் பகுதியில் உள்ள மின்மாற்றியையும் மாற்றி புதிய மின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆய்வு

இதற்கு பதில் அளித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி பேசும் போது, அரசு, குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும் என்பதற்காக, மின்மாற்றி பழுதடைந்து விட்டாலும், வேறு ஒன்றில் இருந்து இணைப்பு கொடுப்பதற்கு வழிவகை செய்து உள்ளது. உறுப்பினர் மின்பளு குறைவாக இருப்பதால் தடை ஏற்படுகிறது என்றும் தெரிவித்து இருக்கிறார். ஆகையால் உறுப்பினர் குறிப்பிட்ட 2 மின்மாற்றிகள் குறித்து உடனடியாக ஆய்வு செய்வதற்கு அதிகாரிகளுக்கு ஆணையிடப்படும் என்று தெரிவித்தார்.