மாவட்ட செய்திகள்

பார்வார்டு பிளாக் நிர்வாகி கைது உறவினர்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை + "||" + Arrested by the administrator Relatives Nellai district Siege in the Collector's office

பார்வார்டு பிளாக் நிர்வாகி கைது உறவினர்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை

பார்வார்டு பிளாக் நிர்வாகி கைது உறவினர்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை
பார்வர்டு பிளாக் நிர்வாகி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து உறவினர்கள், நிர்வாகிகள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
நெல்லை, 

பார்வர்டு பிளாக் நிர்வாகி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து உறவினர்கள், நிர்வாகிகள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

பார்வர்டு பிளாக் மாவட்ட தலைவர் 

நெல்லை சந்திப்பு சி.என்.கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 35). இவர், பார்வர்டு பிளாக் கட்சியின் நெல்லை மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மதன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. கடந்த 6–ந் தேதி அவர்களுடையை தகராறு ஏற்பட்டது.

இது குறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர். அவர் உடலில் காயங்களுடன் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

முற்றுகை போராட்டம் 

இந்த நிலையில் சங்கர் மனைவி சந்தியா, உறவினர்கள் மற்றும் பார்வர்டு பிளாக் கட்சியை சேர்ந்தவர் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள், “போலீசார் சங்கரை தாக்கியுள்ளனர். அதனால் தான் உடலில் காயம் ஏற்பட்டு உள்ளது. அவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கரை விடுதலை செய்ய வேண்டும்“ என்று கூறினார்.

அனைவரும் கலெக்டர் அலுவலகத்துக்கு செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டனர். பின்னர் 5 பேர் கலெக்டர் அலுவலகம் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.