மாவட்ட செய்திகள்

திருவாரூரில் ரத்ததான தின விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் நிர்மல்ராஜ் தொடங்கி வைத்தார் + "||" + Rathnady Day celebrations in Thiruvarur organized by the Collector Nirmalraj

திருவாரூரில் ரத்ததான தின விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் நிர்மல்ராஜ் தொடங்கி வைத்தார்

திருவாரூரில் ரத்ததான தின விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் நிர்மல்ராஜ் தொடங்கி வைத்தார்
திருவாரூரில் ரத்ததான தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் நிர்மல்ராஜ் தொடங்கி வைத்தார்.
திருவாரூர்,

உலக ரத்ததானத்தையொட்டி அரசு மருத்துவகல்லூரி சார்பில் திருவாரூர் ரெயில் நிலையத்தில் இருந்து விழிப்புணர்வு ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தை கலெக்டர் நிர்மல்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மருத்துவகல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் உமா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், காசநோய் தடுப்பு துணை இயக்குனர் புகழ், மருத்துவகல்லூரி துணை கண்காணிப்பாளர் கண்ணன், துணை முதல்வர் ராஜா, ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் பிரதியுஷா மெரவாலா மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.


ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் பஸ் நிலையம், பனகல் சாலை, தெற்கு வீதி வழியாக நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது. இதனை தொடர்ந்து அரசு மருத்துவகல்லூரியில் நடந்த கருத்தரங்கில் முதல்வர் மீனாட்சி சுந்தரம் கலந்து கொண்டு பேசுகையில், ரத்ததானம் செய்வதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துடன் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது என தெரிவித்தார். முன்னதாக சென்ற ஆண்டு அதிக அளவில் ரத்த தானம் செய்தவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. முடிவில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் மாவட்ட செயலாளர் விஜி நன்றி கூறினார். 


தொடர்புடைய செய்திகள்

1. இயற்கை பேரிடர் விழிப்புணர்வு பிரசாரம்
செந்துறை பஸ் நிலையத்தில் உலக பேரிடர் குறைப்பு தினத்தையொட்டி இயற்கை பேரிடர் ஏற்பட்டால் எவ்வாறு தற்காத்து கொள்வது என்று செந்துறை தீயணைப்பு துறையினரால் தற்காப்பு செயல்முறை விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
2. ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர வாய்க்கால் அமைக்கக்கோரி விவசாயிகள் மோட்டார் சைக்கிள் ஊர்வலம்
ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர வாய்க்கால் அமைக்க கோரி விவசாயிகள் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடத்தினர்.
3. வேதாரண்யத்தில், அய்யப்ப பக்தர்கள் ஊர்வலம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி நடந்தது
சபரிமலைக்கு அனைத்து பெண்களும் செல்ல அனுமதி வழங்கிய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வேதாரண்யத்தில் அய்யப்ப பக்தர்கள் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது.
4. பேரிடர் இன்னல் குறைப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் நிர்மல்ராஜ் தொடங்கி வைத்தார்
திருவாரூரில் பேரிடர் இன்னல் குறைப்பு தின விழிப்புணர்வு ஊர் வலத்தை கலெக்டர் நிர்மல்ராஜ் தொடங்கி வைத்தார்.
5. ஆற்றில் மூழ்கியவர்களை மீட்பது எப்படி? தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம்
ஆற்றில் மூழ்கியவர்களை மீட்பது எப்படி? என்று தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.