நாராயணசாமி, தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து ‘மகிழ்ச்சியையும் அன்பையும் பகிர்ந்துகொள்ளும் திருநாள்’
ரம்ஜான் கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘மகிழ்ச்சியையும் அன்பையும் பகிர்ந்துகொள்ளும் திருநாள்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி,
ரம்ஜான் பண்டிகையையொட்டி முதல்-அமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் ரம்ஜான் திருநாளை களிப்புடன் கொண்டாடும் இனிய தருணம் இதுவாகும். உலக மக்களின் துயர் துடைக்கவும், நல்வாழ்வு வாழவும் ஒரு அற்புதமான மார்க்கத்தை உலகிற்கு அளித்தவர் நபிகள் நாயகம். அன்பையும், சகோதரத்துவத்தையும், ஆழமாக நேசித்தவர் அவர். அதனையே தன் மார்க்கத்தை பின்பற்றியவர்களுக்கும் போதித்தார்.
மதச்சார்பின்மைக்கு இலக்கணமாக திகழும் இந்திய குடிமக்களை மதத்தின் பெயரால் பிளவுபடுத்த முயலும் தீயசக்திகள் தோல்வியையே தழுவும் என்பது வரலாறு. இதனை அறியாமல் உண்ணும் உணவில்கூட கட்டுப்பாடுகளை விதித்து இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்க நினைக்கும் ஆதிக்க சக்திகள் தடம் தெரியாமல் போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.
ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு கருத்தை உணர்த்தும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலக மக்களுக்கெல்லாம் ஈகையின் மகத்துவத்தை உணர்த்தும் அற்புத திருநாளாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலகில் உள்ள இஸ்லாமியர்கள் மனித நேயத்துடன் மதநெறிகளை போதித்து உள்ளன்புடன் இறைவனை வணங்கி ஈகை செய்து மட்டற்ற மகிழ்ச்சியுடன் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்.
இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயம் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது. மனிதநேயத்துடன் மத நெறிகளை போதித்து உள்ளன்புடன் இறைவனை வணங்கி மானுட சமுதாயத்துக்கு உவகையுடன் ஈகை செய்து மட்டற்ற மகிழ்ச்சியுடன் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமிய பெருமக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
தூய மனதுடன் நோன்பிருந்து தெளிந்த சிந்தையுடன் தினந்தோறும் அல்லாவை வணங்கி திக்கற்ற ஏழை, எளியவர்கள் பசிபோக்க அவர்களின் வறுமை நீக்க தங்கள் உழைப்பின் மூலம் கிடைத்த செல்வத்தை பகிர்ந்தளிக்கும் இஸ்லாமிய பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். ரம்ஜான் திருநாளில் அனைவரின் வாழ்விலும் இன்பம் பெருகவும், செல்வம் தழைத்தோங்கவும் எல்லாம்வல்ல இறைவனை மனதார வேண்டி அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் வாழ்த்துகளை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
அமைச்சர் ஷாஜகான் விடுத்துள்ள செய்தியில், அன்பு ஒன்றே இந்த உலகத்தின் ஆற்றல் மிகு ஆணிவேர். ஏழைகளை தேடி உதவுங்கள். நீங்கள் ஏழைகளுக்கு செய்யும் உதவி எல்லாம்வல்ல இறைவனாகிய அல்லாவுக்கு நாம் செய்யும் மிகவும் முக்கியமான சேவைகளாக கருதப்படுகிறது. தூய சிந்தனை, தன்னலமற்ற உதவி, சகோதர மனப்பான்மை, சாதி மத பேதங்கள் இன்றி அர்ப்பணிப்பு கொண்ட மதச்சார்பற்ற மனித நேய திருநாளே இந்த ரம்ஜான் திருநாளாகும். இந்த நன்னாளில் அனைவரது வாழ்விலும் நன்மைகள் சிறந்து விளங்க எல்லாம்வல்ல இறைவனை வேண்டி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த ரம்ஜான் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். சகோதரத்துவத்தோடு அனைவரிடமும் அன்பு ஓங்கிட, அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட, அனைவரும் இறைவன் திருவருள் பெற்று எல்லா நலனும் வளமும் பெற வேண்டுமென இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த செய்தியில் ரங்கசாமி கூறியுள்ளார்.
ராதாகிருஷ்ணன் எம்.பி. விடுத்துள்ள செய்தியில் நோன்பு இருப்பதன் மூலம் பொறுப்புகளை சுமக்கும் ஆற்றலையும், சிந்திப்பதற்கான சந்தர்ப்பத்தையும், கட்டுப்படுத்திக் கொள்கின்ற சக்தியையும் இந்த ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் பெறுகிறார்கள். இந்த அற்புத திருநாளில் அனைவரின் வாழ்விலும் அன்பு, அமைதி, இரக்கம், கருணை, ஒற்றுமை, உணர்வு, சகோதரத்துவம் போன்ற நற்பண்புகள் மேலோங்க உறுதியேற்போம் என்று கூறியுள்ளார்.
அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள செய்தியில், மனித வாழ்வில் அகமும், புறமும் தூய்மையடைய புனித வாய்ப்பு ரமலான் மாதமாகும். இறைவனால் மனிதர்களுக்கு அளிக்கப்பெற்ற ஐம்பெரும் கடமைகளை இறைபயத்துடன் உணவு, நீர், பாலுணர்வு, தீய எண்ணம், தீய செயல்களை தவிர்த்து நோன்பு இருக்கும் முஸ்லிம் சகோதரர்கள் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. விடுத்துள்ள செய்தியில், தனி மனித ஒழுக்கம், எளியோர், வலியோர் பேதமின்றி அனைவரையும் நேசிக்கவேண்டும் என்ற வாழ்வியல் நெறிகளை இந்த மண்ணுலகுக்கு வழங்கிய மகான்களில் ஒருவர்தான் நபிகள் நாயகம். அவரது போதனைகளை பின்பற்றி வாழும் இஸ்லாமிய பெருமக்கள் ரமலான் மாதம் முழுவதும் பசி, தாகம், இச்சைகளை கட்டுப்படுத்தி நோன்பு இருந்து இறைவனுக்கு நன்றி செலுத்தி இந்த ஈகை பெருநாளை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
வடக்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் விடுத்துள்ள செய்தியில், கொடைத்தன்மையையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் இந்த ரம்ஜான் திருநாளில் நாம் புதுவையில் அனைவரும் ஒற்றுமையுடனும், அன்புடனும் இல்லாதவர்களுக்கு உதவி இன்புற்று வாழ்ந்திடுவோம் என்று கூறியுள்ளார்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி முதல்-அமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் ரம்ஜான் திருநாளை களிப்புடன் கொண்டாடும் இனிய தருணம் இதுவாகும். உலக மக்களின் துயர் துடைக்கவும், நல்வாழ்வு வாழவும் ஒரு அற்புதமான மார்க்கத்தை உலகிற்கு அளித்தவர் நபிகள் நாயகம். அன்பையும், சகோதரத்துவத்தையும், ஆழமாக நேசித்தவர் அவர். அதனையே தன் மார்க்கத்தை பின்பற்றியவர்களுக்கும் போதித்தார்.
மதச்சார்பின்மைக்கு இலக்கணமாக திகழும் இந்திய குடிமக்களை மதத்தின் பெயரால் பிளவுபடுத்த முயலும் தீயசக்திகள் தோல்வியையே தழுவும் என்பது வரலாறு. இதனை அறியாமல் உண்ணும் உணவில்கூட கட்டுப்பாடுகளை விதித்து இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்க நினைக்கும் ஆதிக்க சக்திகள் தடம் தெரியாமல் போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.
இந்த புனித ரம்ஜான் மாதத்தில் கடுமையான நோன்பிருந்து இறைவனை தொழும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் எனது இனிய ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். சபாநாயகர் வைத்திலிங்கம் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது.
இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயம் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது. மனிதநேயத்துடன் மத நெறிகளை போதித்து உள்ளன்புடன் இறைவனை வணங்கி மானுட சமுதாயத்துக்கு உவகையுடன் ஈகை செய்து மட்டற்ற மகிழ்ச்சியுடன் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமிய பெருமக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
தூய மனதுடன் நோன்பிருந்து தெளிந்த சிந்தையுடன் தினந்தோறும் அல்லாவை வணங்கி திக்கற்ற ஏழை, எளியவர்கள் பசிபோக்க அவர்களின் வறுமை நீக்க தங்கள் உழைப்பின் மூலம் கிடைத்த செல்வத்தை பகிர்ந்தளிக்கும் இஸ்லாமிய பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். ரம்ஜான் திருநாளில் அனைவரின் வாழ்விலும் இன்பம் பெருகவும், செல்வம் தழைத்தோங்கவும் எல்லாம்வல்ல இறைவனை மனதார வேண்டி அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் வாழ்த்துகளை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
அமைச்சர் ஷாஜகான் விடுத்துள்ள செய்தியில், அன்பு ஒன்றே இந்த உலகத்தின் ஆற்றல் மிகு ஆணிவேர். ஏழைகளை தேடி உதவுங்கள். நீங்கள் ஏழைகளுக்கு செய்யும் உதவி எல்லாம்வல்ல இறைவனாகிய அல்லாவுக்கு நாம் செய்யும் மிகவும் முக்கியமான சேவைகளாக கருதப்படுகிறது. தூய சிந்தனை, தன்னலமற்ற உதவி, சகோதர மனப்பான்மை, சாதி மத பேதங்கள் இன்றி அர்ப்பணிப்பு கொண்ட மதச்சார்பற்ற மனித நேய திருநாளே இந்த ரம்ஜான் திருநாளாகும். இந்த நன்னாளில் அனைவரது வாழ்விலும் நன்மைகள் சிறந்து விளங்க எல்லாம்வல்ல இறைவனை வேண்டி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த ரம்ஜான் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். சகோதரத்துவத்தோடு அனைவரிடமும் அன்பு ஓங்கிட, அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட, அனைவரும் இறைவன் திருவருள் பெற்று எல்லா நலனும் வளமும் பெற வேண்டுமென இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த செய்தியில் ரங்கசாமி கூறியுள்ளார்.
ராதாகிருஷ்ணன் எம்.பி. விடுத்துள்ள செய்தியில் நோன்பு இருப்பதன் மூலம் பொறுப்புகளை சுமக்கும் ஆற்றலையும், சிந்திப்பதற்கான சந்தர்ப்பத்தையும், கட்டுப்படுத்திக் கொள்கின்ற சக்தியையும் இந்த ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் பெறுகிறார்கள். இந்த அற்புத திருநாளில் அனைவரின் வாழ்விலும் அன்பு, அமைதி, இரக்கம், கருணை, ஒற்றுமை, உணர்வு, சகோதரத்துவம் போன்ற நற்பண்புகள் மேலோங்க உறுதியேற்போம் என்று கூறியுள்ளார்.
அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள செய்தியில், மனித வாழ்வில் அகமும், புறமும் தூய்மையடைய புனித வாய்ப்பு ரமலான் மாதமாகும். இறைவனால் மனிதர்களுக்கு அளிக்கப்பெற்ற ஐம்பெரும் கடமைகளை இறைபயத்துடன் உணவு, நீர், பாலுணர்வு, தீய எண்ணம், தீய செயல்களை தவிர்த்து நோன்பு இருக்கும் முஸ்லிம் சகோதரர்கள் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. விடுத்துள்ள செய்தியில், தனி மனித ஒழுக்கம், எளியோர், வலியோர் பேதமின்றி அனைவரையும் நேசிக்கவேண்டும் என்ற வாழ்வியல் நெறிகளை இந்த மண்ணுலகுக்கு வழங்கிய மகான்களில் ஒருவர்தான் நபிகள் நாயகம். அவரது போதனைகளை பின்பற்றி வாழும் இஸ்லாமிய பெருமக்கள் ரமலான் மாதம் முழுவதும் பசி, தாகம், இச்சைகளை கட்டுப்படுத்தி நோன்பு இருந்து இறைவனுக்கு நன்றி செலுத்தி இந்த ஈகை பெருநாளை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
வடக்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் விடுத்துள்ள செய்தியில், கொடைத்தன்மையையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் இந்த ரம்ஜான் திருநாளில் நாம் புதுவையில் அனைவரும் ஒற்றுமையுடனும், அன்புடனும் இல்லாதவர்களுக்கு உதவி இன்புற்று வாழ்ந்திடுவோம் என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story