புதுவையில் மத்திய அரசு செயலாளர் ஆய்வு நாராயணசாமியுடன் ஆலோசனை
புதுவை வந்து ஆய்வில் ஈடுபட்ட மத்திய அரசின் செயலாளர் முதல்-அமைச்சர் நாராயணசாமியுடன் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி,
மத்திய அரசின் வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களை புதுச்சேரியில் நிறைவேற்றுவது தொடர்பாக ஆலோசிக்க மத்திய கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் தருண் ஸ்ரீதர் நேற்று புதுச்சேரி வந்தார். இங்கு அவர் சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து பேசினார். தொடர்ந்து நடந்த கூட்டத்திலும் அவர் கலந்துகொண்டார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கமலக்கண்ணன், வளர்ச்சி ஆணையர் அன்பரசு, செயலாளர்கள் சுந்தரவடிவேலு, பார்த்திபன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பால் உற்பத்தியைப்பெருக்க மத்திய அரசு என்னென்ன திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது என்பது குறித்து மத்திய அரசு செயலாளர் தருண் ஸ்ரீதர் விளக்கினார். அந்த திட்டங்களின் மூலம் புதுவையும் பயன்பெற முடியும் என்பதை விளக்கினார்.
முடிவில், அவர் கூறிய திட்டங்களில் புதுச்சேரியில் எந்தெந்த திட்டங்களை அமல்படுத்த முடியும் என்பதை ஆய்வு செய்து அறிக்கையாக மத்திய அரசிடம் சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்கும்படி அரசு செயலாளர்களுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து மத்திய கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் தருண் ஸ்ரீதர் தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் புதுவை அதிகாரிகளும் உடன் சென்றனர்.

Related Tags :
Next Story