மாற்றுத்திறனாளி மாணவனுடன் கிரிக்கெட் விளையாடிய கலெக்டர்
திருவண்ணாமலை அருகே மாற்றுத்திறனாளி மாணவன் வீட்டுக்கு சென்று கலெக்டர் கந்தசாமி கிரிக்கெட் விளையாடினார்.
திருவண்ணாமலை,
மாற்றுத்திறனாளி மாணவன் வீட்டுக்கு மின்இணைப்பு வழங்கியும் நடவடிக்கை எடுத்தார்.
திருவண்ணாமலை அருகே நவம்பட்டு ஊராட்சி இருதயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அல்போன்ஸ் (வயது 43), தொழிலாளி. இவரது மனைவி அந்தோணிமா (42). இவர்களுக்கு கிருஸ்துராஜ் (10) என்ற மகனும், மரியாடெல்டாமேரி (5) என்ற மகளும் உள்ளனர். கிருஸ்துராஜ் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். கிருஸ்துராஜிக்கு உள்ளங்கை மற்றும் கை விரல்களும், கால் பாதம் மற்றும் கால் விரல்களும் பிறவியில் இருந்து இல்லாத மாற்றுத்திறனாளி. அல்போன்ஸ் வீட்டில் ஆரம்ப காலத்தில் இருந்தே மின்சார வசதி இல்லாமல் இருந்துள்ளது.
கடந்த மாதம் 29-ந் தேதி அல்போன்ஸ், தனது மகன் கிருஸ்துராஜ் உடன் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர்கள், மின்வசதி கோரி கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினார்.
இதையடுத்து அவர், கிருஸ்துராஜியிடம் எப்படி எழுதுகிறாய், எனக்கு எழுதி காட்ட முடியுமா? என்று கேட்டு நோட்டு, பேனாவை வழங்கினார். அதைத் தொடர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவன் எழுதி, வாசித்து காண்பித்தான். மேலும் எனக்கு கிரிக்கெட் விளையாட பிடிக்கும் ஆனால் என்னிடம் கிரிக்கெட் பேட் மற்றும் பந்து இல்லை. கிராமத்தில் மற்றவர்கள் விளையாடும் போது அவர்களுடன் சேர்ந்து விளையாடுவேன் என்றான்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஸ்துராஜ் வீட்டிற்கு கலெக்டர் கந்தசாமி நேரில் சென்று கிரிக்கெட் விளையாடுவதற்கான பேட், பால் மற்றும் ‘ஸ்டம்ப்’ ஆகியவற்றை வழங்கினார்.
பின்னர் கிருஸ்துராஜூடன் சேர்ந்து கலெக்டரும் கிரிக்கெட் விளையாடினார். கிருஸ்துராஜின் தன் நம்பிக்கையையும், சுறுசுறுப்பையும் பார்த்து பாராட்டி மகிழ்ந்தார்.
மேலும், விரைவில் கிருஸ்துராஜ் வீட்டிற்கு மின்சார வசதி ஏற்பாடு செய்து தரப்படும் என்றார். தற்போது கிருஸ்துராஜின் வீட்டிற்கு புதிய மின் இணைப்பு வசதி ஏற்படுத்தி தரப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story