கர்நாடக காங்கிரஸ் தலைவராக தினேஷ் குண்டுராவை நியமிக்க ராகுல் காந்தி முடிவு?
கர்நாடக காங்கிரஸ் தலைவராக தினேஷ் குண்டுராவை நியமிக்க ராகுல் காந்தி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
பெங்களூரு,
கே.எச்.முனியப்பா, ஹரிபிரசாத்தை நியமிக்கும்படி மேலிடத்திற்கு துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் சிபாரிசு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் பரமேஸ்வர். காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் பரமேஸ்வர் துணை முதல்-மந்திரியாக பணியாற்றி வருகிறார். இதனால் மாநில தலைவர் பதவியை பரமேஸ்வர் கூடிய விரைவில் ராஜினாமா செய்ய உள்ளார். இந்த நிலையில், மாநில தலைவர் பதவியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சிக்குள் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தலைவர் பதவியை கைப்பற்ற முன்னாள் மத்திய மந்திரி கே.எச்.முனியப்பா, மூத்த தலைவர் ஹரிபிரசாத், தற்போது செயல் தலைவராக உள்ள தினேஷ் குண்டுராவ் ஆகியோர் இடையே கடும் போட்டி உண்டாகி இருக்கிறது.
இதுதவிர மந்திரி டி.கே.சிவக்குமார், முன்னாள் மந்திரி எம்.பி.பட்டீலும் போட்டியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அடுத்த ஆண்டு (2019) நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்துவதுடன், அதிக இடங்களில் வெற்றி பெற வைக்க அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார். அதே நேரத்தில் இளம் தலைமுறைக்கு முன்னுரிமை கொடுக்கும் விதமாக தினேஷ் குண்டுராவை மாநில தலைவராக நியமிக்க ராகுல்காந்தி முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுபற்றி இன்னும் காங்கிரஸ் மேலிடம் உறுதியான முடிவு எதுவும் எடுக்கவில்லை.
இதற்கிடையில், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்கு முன்னாள் மத்திய மந்திரி கே.எச்.முனியப்பா அல்லது மூத்த தலைவர் ஹரிபிரசாத்தை நியமிக்கும்படி துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கட்சி மேலிட தலைவர்களிடம் சிபாரிசு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதே நேரத்தில் தற்போது மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறுவதால், அதில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கவும், அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து செல்லவும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்தவும் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவை மாநில தலைவராக நியமிக்கும்படி ஏ.மஞ்சு உள்ளிட்ட முன்னாள் மந்திரிகள் கட்சி மேலிடத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Tags :
Next Story