மக்கள் விரும்பும் ஆட்சி கொடுப்பதே அரசின் நோக்கம் முதல்-மந்திரி குமாரசாமி பேச்சு
அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை என்றும், மக்கள் விரும்பும் ஆட்சியை கொடுப்பதே அரசின் நோக்கம் என்றும் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பெங்களூரு விதானசவுதாவில் நேற்று பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் மந்திரி கிருஷ்ண பைரேகவுடா, தலைமை செயலாளர் ரத்னபிரபா கலந்து கொண்டனர்.
அப்போது அரசு கொண்டு வரும் திட்டங்களை மக்களிடையே எடுத்து செல்ல வேண்டியது அதிகாரிகள் ஒவ்வொருவரின் கடமை என்று முதல்-மந்திரி குமாரசாமி கூறினார். மேலும் ஆலோசனை கூட்டத்தின் போது அதிகாரிகள் மத்தியில் முதல்-மந்திரி குமாரசாமி பேசியதாவது:-
மக்கள் பிரதிநிதிகள் நாங்கள் சொல்வதை எல்லாம் கேட்டு, அப்படியே அதிகாரிகள் நடக்க வேண்டும் என்று வற்புறுத்த போவதில்லை. அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் அரசு விரும்பவில்லை. மக்கள் விரும்பும் ஆட்சியை கொடுப்பதே அரசின் முக்கிய நோக்கமாகும். அதற்கு மக்களுடன் அதிகாரிகள் நட்புறவுடன் இருக்க வேண்டும். அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டங்களையும் மக்களிடையே கொண்டு சேர்ப்பது அதிகாரிகளின் கடமையாகும். மக்களுடன் சேர்ந்து அதிகாரிகள் ஒரு குடும்பமாக பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி பேசினார்.
அதே நேரத்தில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்காத அதிகாரிகள் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்-மந்திரி குமாரசாமி எச்சரித்துள்ளார்.

Related Tags :
Next Story