மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கல்வி உதவித்தொகையுடன் புதிய முதுகலை பட்டய படிப்பு
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கல்வி உதவித்தொகையுடன் புதிய பட்டய படிப்பு இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
பேட்டை,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கல்வி உதவித்தொகையுடன் புதிய பட்டய படிப்பு இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
புதிய பட்டய படிப்புநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதுப்பிக்கப்படக்கூடிய ஆற்றல்களின் அறிவியல் துறை சார்பில் ஓர் ஆண்டு முதுகலை பட்டய படிப்பான ‘புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மேலாண்மை தணிக்கை‘ என்ற புதிய பட்டய படிப்பு இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
நாட்டில் புதுப்பிக்கப்படக்கூடிய ஆற்றல் துறையின் பங்கு இன்றியமையாதது ஆகும். இந்த படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு தொழிற்சாலைகளில் வேலை கிடைக்கும். சுயதொழில்கள் தொடங்கலாம்.
கல்வி உதவித்தொகைஇந்த படிப்பில் சேரும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள 1 மெகாவாட் சூரிய மின்உற்பத்தி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்படும். பி.எஸ்சி. இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் பி.இ., பி.டெக். படித்து முடித்தவர்கள் இந்த படிப்பில் சேரலாம்.
இந்த படிப்பில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க வருகிற 29–ந்தேதி கடைசிநாள் ஆகும். மேலும் விவரங்களுக்கு www.msuniv.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்திலும், துறை தலைவர் ராஜசேகரனை 94423 27921 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.