கயத்தாறு அருகே காற்றாலைகள் அமைக்க எதிர்ப்பு: லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
கயத்தாறு அருகே காற்றாலைகளை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, உதிரிபாகங்களை ஏற்றி வந்த லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கயத்தாறு,
கயத்தாறு அருகே காற்றாலைகளை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, உதிரிபாகங்களை ஏற்றி வந்த லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காற்றாலைகள் அமைக்க எதிர்ப்புகயத்தாறு சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான காற்றாலை பண்ணைகள் உள்ளன. இந்த நிலையில் கயத்தாறு அருகே வெள்ளாளங்கோட்டை பஞ்சாயத்து சூரியமினிக்கன் கிராமத்தில் கூடுதலாக புதிய காற்றாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால் சாலை பழுதடைவதுடன், போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. காற்றாலைகளால் விவசாய நிலங்களிலும் பயிர் விளைச்சல் உற்பத்தி குறைகிறது என்று கூறி, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
லாரிகள் சிறைபிடிப்புநேற்று காலையில் சூரியமினிக்கன் கிராமத்துக்கு காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த லாரிகளை அப்பகுதி மக்கள் சிறைபிடித்தனர். லாரிகளின் முன்பாக ஏராளமான ஆண்களும், அமர்ந்து காற்றாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.